தேனிமலை,அண்ணாநகர்,மாரியம்மன் கோயில் தெரு ஆகியவற்றில் 1706 நபர்களில் தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை தேனிமலை,அண்ணாநகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட தேனிமலை, அண்ணா நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 1706 குடும்பங்களில் தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பொருட்டு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது.
மேற்படி கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கலெக்டர் தர்ப்பகராஜ் இன்று நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நில அளவை பணிகள் மேற்கொண்டு நடைமுறையில் உள்ள அரசாணையின்படி பொதுமக்களுக்கு விரைந்து பட்டா வழங்க அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், கோட்டாட்சியர் (பொ) செந்தில்குமார், வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.