திருவண்ணாமலை மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்தவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய விவரம் வருமாறு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பாலூர் சேர்ந்தவர் திருனேஷ் (வயது 26) தந்தை பெயர் அருள்.
திருனேஷ், திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ட்ரீம்ஸ் ஆயுர்வேதிக் பார்லர் மற்றும் ஸ்பா எனும் மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்தார். வேங்கிக்கால் கணேஷ் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில் திடீரென அவர் தங்கி இருந்த வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருனேஷ், கோயம்புத்தூரில் வேலை செய்த போது ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தி அடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனாலும் வேலை செய்த இடத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு திருனேஷ் தற்கொலை செய்து கொண்டிருப்பாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேங்கிக்கால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Social Plugin