திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 14 நர்சு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 3-ந் தேதி கடைசி நாளாகும்.
இது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலமாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் - 14
வயது 50 வயதிற்கு உட்பட்டவர்கள்
மாத சம்பளம் - ரூ.18 ஆயிரம்
தகுதி
இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரிகளில் இருந்து GNM/B.Sc. (நர்சிங்) டிப்ளமோ.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
1. கல்வித் தகுதி சான்று.
2. மதிப்பெண் சான்று.
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
செயல்பாட்டு செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை-606601
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்களுடன் மேற்கண்ட முகவரியில் 3-4-2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
0 Comments