திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சிறுமி பலாத்காரம்

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். 

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சிறுமி பலாத்காரம்

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல ஆந்திர, தெலுங்கானா மக்கள் அதிக அளவில் வருகின்றனர். அந்த வகையில் ஆந்திராவைச் சேர்ந்த கணவன்-மனைவி தனது 9 வயது மகளுடன் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.

மீண்டும் ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரயிலுக்காக காத்திருந்த போது அசதியில் கணவனும்-மனைவியும் தூங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் ஒருவர், அந்த 9 வயது சிறுமியை பொம்மை வாங்கித் தருவதாக நைசாக பேசி மறைவான இடத்திற்கு  அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. 

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சிறுமி பலாத்காரம்

சிறுமி வலியால் அழுது துடித்த சத்தத்தை கேட்டு அக்கம்-பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமிக்கு நடந்த கொடுமையை அறிந்து ஆத்திரமடைந்து அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்தனர்.

அவரது பெயர் முனுசாமி(வயது 60), அரக்கோணத்தைச் சேர்ந்தவர் என்பதும், சாமியார் என்ற போர்வையில் அவர் ரயிலில் ஓசி பயணம் மேற்கொண்டு அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து செல்வதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சிறுமி பலாத்காரம்
முனுசாமி

9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலைக்கு விசேஷ நாட்களில் ரயிலில் ஓசி பயணம் மேற்கொண்டு சாமியார் என்ற போர்வையில் வந்து இறங்கும் நபர்கள் பக்தர்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டு மீண்டும் ரயிலில் ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலரும், திருவண்ணாமலையில் உள்ள சில சாமியார்களும் போதையில் திரிவதை அடிக்கடி பார்க்கலாம். பவுர்ணமி நாட்களில் காமராஜர் சிலை எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் காவி வேஷ்டியோடு சிலர் சரக்கடிப்பதையும் காணலாம்.

எனவே சாமியார் என்ற போர்வையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்களும்,பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர். 

சிவபக்தர் வெளியிட்ட ஆடியோ

கிரிவலப்பாதையில் கஞ்சா ...