பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகின.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கிவருகிறது. நேற்று இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். காவலர் மட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு 11.15 மணியளவில் அந்த அலுவலகத்தின் தரைதளத்தில் திடீரென தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், கம்ப்யூட்டர்கள், ஏசி போன்ற பொருட்கள் தீயில் கருகி சேதமானது. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
யுபிஎஸ் சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
படங்கள்-பார்த்திபன்