பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இஸ்லாமியர்கள் போராட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பாய், தலையணையுடன் வந்து இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். 

பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இஸ்லாமியர்கள் போராட்டம்

திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித்துக்கு சொந்தமாக இனாம்வேளகந்தல், சீலப்பந்தல் ஆகிய கிராமங்களில் 58.80 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. சீலப்பந்தலில் திமுக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். பொய்யான ஆவணங்களை கொண்டு தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டிருப்பதாகவும், இது சம்பந்தமான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வக்பு வசம் ஒப்படைக்க கலெக்டருக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 நாட்களில் இடத்தை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு கலெக்டர் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கால அவகாசம் முடிந்தும் மேல் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் கலெக்டர் பாஸ்கர பாண்டியனை கண்டித்து இஸ்லாமியர்கள் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இஸ்லாமியர்கள் போராட்டம்

பாய், தலையணையுடன் அவர்கள் வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முடிவு தெரியும் வரை இங்கேயே தங்கியிருக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

திருவண்ணாமலை  நவாப் சந்தாமியான் மஸ்ஜித், மீர்மோமின் மதத் டோம்ப் வக்பு ஜமாத் மற்றும் மஹால்லாவாசிகள் சார்பில் இந்த பேராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 

பேராட்டத்திற்கு நவாப் சந்தாமியான் மஸ்ஜித் தலைவர் ஏ.ஆர்.நாசர் உசேன் தலைமை தாங்கினார்.

காலை ஆரம்பித்த இந்த காத்திருப்பு போராட்டம் பகல் 2 மணி வரை தொடர்ந்தது. சாத்தனூர் அணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சருடன் பங்கேற்று அலுவலகத்திற்கு திரும்பிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போராட்டம் நடத்திய நிர்வாகிகளை அழைத்து பேசினார். 

பாய், தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இஸ்லாமியர்கள் போராட்டம்

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து  காத்திருப்பு போராட்டத்தை இஸ்லாமியர்கள் வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.