ரூ.27ஆயிரம் ஊதியத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி

திருவண்ணாமலையில் ரூ.27 ஆயிரம் ஊதியத்துடன் கூடிய குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடம், ரூ.18 ஆயிரம் ஊதியத்துடன் கூடிய சமூக பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். 

ரூ.27ஆயிரம் ஊதியத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி

இது சம்பந்தமாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. 

திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட, பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா)-1 (Protection Officer-Non – Institution Care) பணியிடம் மற்றும் திருவண்ணாமலை காவல் எல்லைக்குட்பட்ட Special Juvenile Police Unit – களுக்கு பணியாற்றிட ஏதுவாக சமூகப் பணியாளர்கள்-2 ((Social Worker) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாதுகாப்பு அலுவலர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.27 ஆயிரத்து 804 வழங்கப்படும். 

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/சமூகவியல்/குழந்தை மேம்பாடு/மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/மனநல மருத்துவம்/ சட்டம்/பொது சுகாதாரம்/சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம்.

அல்லது 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியாளர்/சமூகவியல்/ குழந்தை மேம்பாடு/மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/மனநல மருத்துவம்/சட்டம்/பொது சுகாதாரம்/சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட உருவாக்கம்/செயல்படுத்தல்/ கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு/சமூக நலத் துறையில் முன்னுரிமை.

கணினிகளில் தேர்ச்சி, வயது வரம்பு 42 ஆண்டுகள்.

சமூகப் பணியாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.18 ஆயிரத்து 536 வழங்கப்படும் 

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிசமூகவியல்/சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் தேர்ச்சி. வயது வரம்பு 42 வயது.

மேற்கூறிய பணியிடங்களுக்கு உரிய தகுதியினை பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பித்தல் வேண்டும். 

ரூ.27ஆயிரம் ஊதியத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி
பாஸ்கர பாண்டியன்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 06.02..2025 அன்று மாலை 5.45-க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வட்டாட்சியார் அலுவலக வளாகம், பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை – 606601. என்ற அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். 

மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண்: 04175 – 223030. அலைபேசி எண் : 6382614143, 6382614197 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம். விண்ணப்பங்களை https://tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

------------------------------------

Link:-http://www.youtube.com/@AgniMurasu