திருப்பதிக்கு 1000 பேர் பாதயாத்திரை சென்றனர்

திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதி கிராமங்களில் இருந்து 1000 பேர் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர்.

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மலமஞ்சனூர்புதூர், தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியார்பாளையம், டி. வேலூர், மோட்டூர் உள்பட 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் வருடந்தோறும் மார்கழி மாதம் திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்று வருகின்றனர்.

திருப்பதிக்கு 1000 பேர் பாதயாத்திரை சென்றனர்

இந்த வருடம் 26-வது வருடமாக பாதயாத்திரை சென்றனர். இதற்காக மல மஞ்சனூர் புதூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் கூடிய  மக்கள்  அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கோயில் தர்மகர்த்தா ஆர்.சுப்பராயன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, ஆலுடையன், மார்க்கண்டேயன்,  ரமேஷ், பூமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.சரவணன், பழனி, மண்ணுகுருக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பதிக்கு 1000 பேர் பாதயாத்திரை சென்றனர்

பின்பு அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை, கலசபாக்கம், போளுர், வேலூர் வழியாக திருப்பதி சென்று அடைகின்றனர். அங்கிருந்து 3800 படிக்கட்டுகள் கொண்ட நடைபாதை வழியாக அவர்கள் திருமலைக்குச் சென்று வருகிற 10-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று வெங்கடேச பெருமாளை தரிசிக்கின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த மலமஞ்சனூர்புதூர் பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1000-த்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் மஞ்சள் ஆடை அணிந்து மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு 'கோவிந்தா கோவிந்தா'என்ற பக்தி முழக்கத்துடன் திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். பலர் தங்களது பிள்ளைகளை தோளில் சுமந்து நடந்து சென்றனர்.

திருப்பதிக்கு 1000 பேர் பாதயாத்திரை சென்றனர்

கிராமம் செழிப்படைவும், மக்கள்  நோய் நொடியின்றி நன்றாக இருக்கவும், உலக நன்மைக்காகவும், தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும் இவர்கள் 300 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டு 3800 படிக்கட்டுகள் ஏறி ஏழுமலையானை வழிபடுகின்றனர். 

திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு பாதயாத்திரை செல்வதால் நோய்கள் விலகுவதாகவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடுவதாகவும், பிள்ளைபேறு கிடைப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.