காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்?

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? என கைதான கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்?
சரண்யா

திருவண்ணாமலை, பேகோபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 39). கார் டிரைவர். பணம், கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். 

பின்னர் அரசுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் சரண்யாவை(29) என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சரண்யா, திருவண்ணாமலையில் பன்னீர் கோல்டு கவரிங் கடையில் வேலை செய்த போது அவர்களிடையே காதல் மலர்ந்துள்ளது. 

இவர்களுக்கு ஹேமபிரியா(16) என்ற மகளும், சக்திவேல்(11), வெற்றிவேல்(8) என்ற மகன்களும் உள்ளனர். 

இந்நிலையில் சரண்யாவின் தாயார் காவேரி, கடந்த 1-ந் தேதி மகளுக்கு போன் செய்த போது அவர் போனை எடுக்கவில்லையாம். இதையடுத்து பேகோபுரத்தெருவில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு மகள் இல்லை. பேத்தி ஹேமபிரியாவை கேட்ட போது காலையிலிருந்தே தாயாரை காணவில்லை என்று கூறினாராம். 

சரண்யா போன திசை தெரியாததால், மகளை கண்டுபிடித்து தரக்கோரி காவேரி, திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை தேடி வந்தனர். 

இது குறித்து விசாரிக்க போலீசார் கோபி வீட்டிற்கு சென்ற போது அவர் தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவரது தாயாரை விசாரித்ததில் சரண்யாவை துண்டு துண்டாக வெட்டி உடலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வீசியது தெரிய வந்தது. 

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்?
கோபி

இதையடுத்து பெண் காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கோபியையும், அவரது தாயார் சிவகாமியையும்(55), உடந்தையாக இருந்த திருவண்ணாமலை வடமாத்தாதி தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயராகவன்(44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட கோபிநாத் பல்வேறு இடங்களில் கடன் பெற்று கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்ததாகவும், மனைவியும் மகளிர் குழுவில் கடன் வாங்கி தந்ததும், கடன்காரர்களிடம் அவரது மனைவி பதில் சொல்லி வந்ததாகவும், மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவரை கொன்று உடலை வெட்டி காட்டில் வீசி விட்டு வந்ததாகவும் அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது. 

கோபிநாத், திருவண்ணாமலையில் சில முக்கிய பிரமுகர்களின் கார்களுக்கு ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்த கொலை சம்பவம், திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Post Previous Post

No comments