திருவண்ணாமலை:பக்தரை தாக்கிய 3 திருநங்கைகள் கைது
திருவண்ணாமலை:பக்தரை தாக்கிய 3 திருநங்கைகள் கைது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தம்பதியை அடித்து பணம் கேட்டதாக 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலம் செல்லவும் வருகை தரும் பக்தர்களை மடக்கி சுத்தி போட்டு திருநங்கைகள் அடாவடி வசூலில் ஈடுபடுவது அடிக்கடி நடந்து வருகிறது.
நேற்று இரவு அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே புதுமணத் தம்பதியினரை திருநங்கைகள் மடக்கி சுத்தி போட்டு 500 ரூபாய் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தம்பதியினர் 200 ரூபாயை கொடுத்தார்களாம். இதை வாங்க மறுத்து திருநங்கைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைக் கேள்விப்பட்டு போக்குவரத்து காவலர் ஒருவர் அங்கு வந்து அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அவரது முன்னிலையிலேயே திருமண கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை திருநங்கைகள் அடித்ததும், இதை படம் எடுத்த போக்குவரத்து போலீஸ்காரரின் செல்போனை பிடுங்க முயற்சித்ததும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதும் வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து தம்பதியர்களை அச்சுறுத்தி கன்னத்தில் அடித்ததாக கூறி 3 திருநங்கைகள் மீது திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கைதானவர்களின் பெயர், விவரம் வருமாறு,
1)மாயாஸ்ரீ என்கிற மகிலன்(வயது 20),
செங்கம் தாலுகா, தோக்கவாடி கிராமம்.
2)தனுஷ்கா என்கிற தட்சிணாமூர்த்தி(19),
தண்டராம்பட்டு தாலுகா, ரெட்டியார்பாளையம் கிராமம்.
3)ரீனா என்கிற வெங்கடேசன்(24),
ஊத்தங்கரை தாலுகா, சிங்காரப்பேட்டை.
No comments