கபடி போட்டி-திருவண்ணாமலையிடம் அடங்கியது சிவகங்கை
கபடி போட்டி-திருவண்ணாமலையிடம் அடங்கியது சிவகங்கை
3 நாட்கள் போட்டி திருவண்ணாமலையில் இன்று தொடங்கியது- 38 மாவட்டங்கள் பங்கேற்பு
திருவண்ணாமலையில் மாநில அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சிவகங்கை அணியை வீழ்த்தி திருவண்ணாமலை அணி அபார வெற்றி பெற்றது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பின்புறம், எஸ்.பி அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் அமெச்சூர் கபடி கழகம், 50-வது மாநில இளையோர் பெண்கள் கபடி போட்டியை நடத்துகிறது.
இன்று மாலை போட்டிகள் தொடங்கியது. திருவண்ணாமலை-சிவகங்கை மாவட்ட அணிகளுக்கிடையேயான போட்டியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் டாஸ் போட்டு துவக்கி வைத்தார்.
மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சேர்மன் பாண்டியன், பொருளாளர் சண்முகம், பொதுச்செயலாளர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் போட்டியில் சிவகங்கையை வீழ்த்தி திருவண்ணாமலை அணி அபார வெற்றியை பெற்றது. திருவண்ணாமலை அணி 40 புள்ளிகளும், சிவகங்கை அணி 13 புள்ளிகளும் பெற்றன.
இந்த போட்டி 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்க 38 மாவட்டங்களில் இருந்து 456 வீராங்கனைகள் வந்திருக்கின்றனர்.
No comments