விடிஎஸ் பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு-ஏஎஸ்பி பேட்டி

விடிஎஸ் பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு-ஏஎஸ்பி பேட்டி

திருவண்ணாமலை விடிஎஸ் பள்ளியில் பாலியல் சீண்டல்கள் குறித்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என ஏஎஸ்பி தெரிவித்தார். 

விடிஎஸ் பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு-ஏஎஸ்பி பேட்டி

திருவண்ணாமலை காந்தி நகரில் விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு நிதி உதவி பெறும் இப்பள்ளியில் 3300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

விடிஎஸ் பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு-ஏஎஸ்பி பேட்டி

இந்தப் பள்ளியில் கடந்த 7-ஆம் தேதி சைல்ட் லைன் சார்பில் மாணவிகளுக்கான 'குட் டச்' 'பேட் டச்' என்ற பாலியல் சீண்டல்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குழந்தைகள் நல அலுவலர் செல்வி தலைமையில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது குழந்தைகளிடம் 'குட் டச்' 'பேட் டச்' குறித்து விசாரித்த போது சில மாணவிகள் தங்களுக்கு சில ஆசிரியர்களால் பாலியல் சீண்டல் நடைபெற்றதாக தெரிவித்தார்களாம். 

இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் செல்வி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து திருவண்ணாமலை ஏஎஸ்பி(உதவி போலீஸ் சூப்பிரண்டு) சதீஷ்குமார் தலைமையில் 3 பெண் இன்ஸ்பெக்டர்கள் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். 

இது குறித்து ஏஎஸ்பி சதீஷ்குமார் கூறுகையில், மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையில் இதுவரை எந்த ஆசிரியர் மீதும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு உறுதிப்படவில்லை என்றும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாலியல் சீண்டல்கள் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Next Post Previous Post

No comments