ஒரே பைக்கில் 3 பேர் பயணம்-மாணவர்கள் பரிதாப மரணம்

ஒரே பைக்கில் 3 பேர் பயணம்-மாணவர்கள் பரிதாப மரணம்

 ஒரே பைக்கில் 3 பேர் பயணம்-மாணவர்கள்  பரிதாப மரணம்

ஒரே பைக்கில் பயணம் செய்த 3 மாணவர்கள் விபத்தில் சிக்கியதில் ஒரு மாணவன் மூளை சிதறி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் வன்னியன். இவரது மகன் முத்துலிங்கம்(வயது 17). இவர் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருபவர்கள் ராமு(17), ஜெகதீஷ்(17). ராமு சின்னஓலைப்பாடி கிராமத்திலும். ஜெகதீஷ் இசுக்கழி காட்டேரி கிராமத்திலும் வசித்து வருகின்றனர். 3 பேரும் நண்பர்கள். 

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 3 பேரும் ஒரே பைக்கில் ஜெகதீசை வீட்டில் விட்டு விட்டு வர சென்றனர். முத்துலிங்கம் பைக்கை ஓட்ட மற்ற இருவரும் பின்னால் உட்கார்ந்து வந்தனர். 

ஆவூர் முருகர் கோயில் அருகே வந்த போது அந்த பைக், அங்கிருந்த அரச மரத்தின் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதில் 3 பேரும் தூக்கியெறிப்பட்டு படுகாயம் அடைந்தனர். முத்துலிங்கம் தலைபிளந்து மூளை சிதறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். 

ஒரே பைக்கில் 3 பேர் பயணம்-மாணவர் பரிதாப மரணம்

ராமுவும், ஜெகதீசும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமு என்ற மாணவனும் உயிரிழந்தார். இதை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெகதீஷ் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

முத்துலிங்கம்


ஒரே பைக்கில் 3 பேர் பயணம்-மாணவர்கள் பரிதாப மரணம்
ராமு

ஜெகதீஷ்

அதிவேகம் ஆபத்து என்பதை உணராமல் ஒரே பைக்கில் 3 பேர் பயணித்ததே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஹெல்மெட் அணியாததால் மரத்தில் தலை மோதி மாணவன் உயிரிழக்க நேரிட்டுள்ளது. பின்னால் உட்கார்ந்து சென்ற 2 மாணவர்களும் இறந்துள்ளனர். 

3 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments