லஞ்சம் வாங்க மாட்டோம்-கலெக்டர்,அலுவலர்கள் உறுதிமொழி
லஞ்சம் வாங்க மாட்டோம்-கலெக்டர்,அலுவலர்கள் உறுதிமொழி
திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைகளின்படி ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் இந்த ஆண்டு 28.10.2024 முதல் 03.11.2024 வரை '‘Corruption free India for a developed Nation” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (28.10.2024); ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் கீழ்கண்ட உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.
அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்;, இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்;, அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்;, பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும்; ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்
இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments