போதை பொருள் நடமாட்டம் இருக்காது-புது எஸ்.பி உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருள் உபயோகம் முற்றிலும் இல்லாத வகையில் காவல்துறையின் பணி இருக்கும் என புது எஸ்.பி. சுதாகர் தெரிவித்தார்.

போதை பொருள் நடமாட்டம் இருக்காது-புது எஸ்.பி உறுதி

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பிரபாகர் சென்னை தாம்பரம் குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை கமிஷனராக இருந்த எம்.சுதாகர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை அவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளான போதை பொருள் மற்றும் இதர சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு நடக்கும் செயல்பாடுகளை முற்றிலுமாக முடக்கப்படும். போதைப் பொருள் உபயோகம் என்பது முற்றிலும் இல்லாத வகையில் காவல் பணியின் செயல்பாடு இருக்கும்.

திருவண்ணாமலை திருத்தலத்தில் கார்த்திகை தீபம் வரவுள்ளதால் அதை யொட்டி காவல்துறை செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் திட்டங்கள் எல்லாம் முறையாக வகுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முழுமையாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்படும்.

போதை பொருள் நடமாட்டம் இருக்காது-புது எஸ்.பி உறுதி

அதே போல திருவண்ணாமலைக்கு கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறை சார்பாக எந்த மாதிரியான வசதிகள் மேற்கொள்ள வேண்டுமோ அவை அனைத்து மேற்கொள்ளப்படும். நகரப் பகுதியிலும், மாவட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் முறையாக இருப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

பழைய குற்றவாளிகள் உள்பட குற்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விதி மீறல்கள், குற்றச் செயல்கள் நடைபெறாமல் காவல் பணி நேர்மையாகவும் சீராகவும் இருப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதவியேற்று 50 நாளே ஆன நிலையில் எஸ்.பி மாற்றம் ஏன்?

பிரபாகர்

கரூர் எஸ்.பியாக இருந்த பிரபாகர், கடந்த 50 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். குற்றச் செயல்கள் நடந்தால் நேரில் சென்று விசாரணை நடத்துவது, வேலை செய்யாத அதிகாரிகளை விரட்டி வேலை வாங்குவது, ஒழுங்காக வேலை செய்யாதவர்களுக்கு சஸ்பெண்ட் வார்னிங் கொடுப்பது என பணியில் அதிரடி காட்டினார்.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மருத்துவ விடுப்பு எடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றார். அவரது விருப்பத்தின் பேரில் அவருக்கு சென்னைக்கு மாறுதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புது எஸ்.பியாக பொறுப்பேற்ற சுதாகர், 2013-ல் கோயமுத்தூரிலும், 2021-ல் காஞ்சிபுரத்திலும் எஸ்.பியாக இருந்துள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பியாக இருந்த போது போதை பொருட்களுக்கு எதிராக அவர் தயாரித்த மவுனம் கலைவோம் என்ற குறும்படம் முதல் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது.



Next Post Previous Post

No comments