F

18 ஆயிரம் புதிய வாக்காளர்கள்-15 ஆயிரம் பேர் நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்கியிருக்கிறது. செங்கத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்து 80 ஆயிரத்து 982 வாக்காளர்கள் உள்ளனர். 

18 ஆயிரம் புதிய வாக்காளர்கள்-15 ஆயிரம் பேர் நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், 01.01.2025 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன் பெற்றுக் கொண்டார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலை யொட்டி இறுதி வாக்காளர் பட்டியலானது கடந்த 27.03.2024 அன்று வெளியிடப்பட்டதில் மொத்தம் 20,90,873 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர்.  (ஆண் வாக்காளர்கள் -1023529, பெண் வாக்காளர்கள் - 1067219  இதர வாக்காளர்கள் -125) 

அதன் பின்பு, வாக்காளர் பட்டியலின் தொடர் திருத்தப் பணி 27.03.2024 முதல் தொடங்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6,  இறப்பு மற்றும் வெளியூரில் வசிப்பவர்களை நீக்கம் செய்திட படிவம் 7, வாக்காளர் பெயர், உறவினர் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட திருத்தத்திற்கு படிவம் 8 ஆகியவை பெறப்பட்டன. அவ்வாறு வரப்பெற்ற படிவங்களில் மூலமாக கீழ்காணும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி புதியதாக 18ஆயிரத்து 825 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.(ஆண்-8815, பெண்-10005, மூன்றாம் பாலினத்தவர்-5)

15,099 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.(ஆண்-7424, பெண்-7673, மூன்றாம் பாலினத்தவர்-2)

வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டமன்ற தொகுதி வாரியாக வருமாறு:

செங்கம் (தனி). ஆண்கள்-139164.பெண்கள்-141806.இதரர்-12. மொத்தம்-280982.

திருவண்ணாமலை. ஆண்கள்-133880.பெண்கள்-142917.இதரர்-42. மொத்தம்-276839

கீழ்பென்னாத்தூர். ஆண்கள்-125397.பெண்கள்-130766.இதரர்-10. மொத்தம்-256173

கலசப்பாக்கம். ஆண்கள்-123505.பெண்கள்-127590.இதரர்-12. மொத்தம்-251107

போளுர். ஆண்கள்-118908.பெண்கள்-123787.இதரர்-10. மொத்தம்-242707. 

ஆரணி. ஆண்கள்-135624.பெண்கள்-143870.இதரர்-30. மொத்தம்-279524.

செய்யார். ஆண்கள்-127858.பெண்கள்-133787.இதரர்-7. மொத்தம்-261652.

வந்தவாசி(தனி). ஆண்கள்-120584.பெண்கள்-125026.இதரர்-5. மொத்தம்-245615

8 தொகுதிகளில் ஆண்கள்-10,24,920.பெண்கள்-10,69,551.இதரர்-128 என மொத்தம் 20,94,599 வாக்காளர்கள் உள்ளனர்.  

18 ஆயிரம் புதிய வாக்காளர்கள்-15 ஆயிரம் பேர் நீக்கம்

இந்த வாக்காளர் பட்டியல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதி வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 01.01.2025 -ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணி தொடங்கப்பட உள்ளது. 

18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 01.01.2007 ஆம் தேதி வரை பிறந்தவர்கள் தங்கள் பெயரை புதியதாக சேர்க்க படிவம்-6, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயரை சேர்க்க படிவம்-6எ, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயருடன் ஆதார் எண் இணைக்க படிவம்-6பி, வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர் பெயர் நீக்கம்  செய்ய அல்லது படிவம் 6 மீது ஆட்சேபணை தெரிவிக்க படிவம்-7, குடியிருப்பு முகவரியை மாற்றம் செய்ய, பதிவுகளில் திருத்தம் செய்ய, மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம்-8 ஆகியவற்றை பயன்படுத்தலாம். 

29.10.2024 முதல் 28.11.2024 வரையிலான அனைத்து வேலை நாட்களில் மனுக்களை அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அல்லது தேர்தல் ஆணைய இணையதளம் https://www.elections.tn.gov.in/ மற்றும் https://tiruvannamalai.nic.in/ என்ற மொபைல் ஆப் மூலமாகவும் வாக்காளர்கள் மற்றும் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். தங்கள் பெயரை சரி பார்த்துக் கொள்ளலாம்.

படிவங்கள் பெறப்படும் நாட்கள்- 29.10.2024 முதல் 28.11.2024 வரை 

சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்- 16.11.2024 (சனி), 17.11.2024 (ஞாயிறு), 23.11.2024 (சனி), 24.11.2024 (ஞாயிறு) 

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு- 06.01.2025 

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

----------------------------------


Next Post Previous Post

No comments