தண்டு வடம் பாதிக்கப்பட்டவர், படிப்பை தொடர கலெக்டர் ஏற்பாடு

தண்டு வடம் பாதிக்கப்பட்டவர், படிப்பை தொடர கலெக்டர் ஏற்பாடு

தென்னமரத்தில் ஏறிய போது கீழே விழுந்து முதுகு தண்டு வடம் கடுமையாக பாதிக்கப்பட்டவரை பள்ளியில் இருந்து தனியார் பள்ளி நிர்வாகம் நீக்கியது. இதைத் தொடர்ந்து அந்த மாணவர் படிப்பை தொடர கலெக்டர் ஏற்பாடு செய்தார். 

தண்டு வடம் பாதிக்கப்பட்டவர், படிப்பை தொடர கலெக்டர் ஏற்பாடு

இது பற்றிய விவரம் வருமாறு, 

போளூர் வட்டம் எடப்பிறை கிராமத்தைச் சேர்ந்த ரவியின் மகன் தருண், கலசப்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பதினோராம் வகுப்பு தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த பொழுது தென்னங்காய்களை பறிப்பதற்காக மரத்தில் ஏறி தவறி விழுந்து விட்டார். இதில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டதால்  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். தருண் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிக்கு வராத நிலையில் பள்ளியிலிருந்து அவரை தனியார் பள்ளி நிர்வாகம் நீக்கியது.

மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்ட உள்ள நேரத்தில் பள்ளி படிப்பும் தடைபட்டதால் அவரது பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்தனர். பிறகு கலெக்டர் பாஸ்கர பாண்டியனை அணுகி தங்கள் மகன் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். 

மாணவருக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் ஊக்கம் அளித்து பேசிய கலெக்டர் மாணவரை உடனடியாக பள்ளியில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மாணவரை திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் சேர்த்து மாணவர் தொடர்ந்து படிக்க ஏற்பாடுகளை செய்தார். 

இதனால் மகிழ்ச்சி அடைந்த தருணும், அவரது தந்தையும் கலெக்டரை இன்று நேரில் சந்தித்து ; நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கெர்ணடனர். அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நன்கு படிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Post Previous Post

No comments