செல்போன் பழுது நீக்க பயிற்சி-இந்தியன் வங்கி அளிக்கிறது
செல்போன் பழுது நீக்க பயிற்சி-இந்தியன் வங்கி அளிக்கிறது
போட்டோ, வீடியோகிராபி, சிசிடிவி குறித்த பயிற்சியிலும் சேரலாம்
சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சியில் சேர 15ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்-கலெக்டர் தகவல்
இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் செல்போன் பழுது மற்றும் போட்டோ, வீடியோகிராபி, சிசிடிவி குறித்த பயிற்சியிலும் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய தொழில் முனைவோருக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசுடன் இணைந்து, இந்தியன் வங்கி சார்பில் 12 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அனுபவமும் திறமையும் வாய்ந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சியோடு தொழிலுக்கான வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு, சந்தை ஆய்வு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பயனுள்ள வாழ்வியல் திறன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் காணொளி காட்சி மூலம் (LCD Projector) செயல்முறை விளக்கங்களும், இந்நிறுவனத்தின் மூலமாக பயிற்சி பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய தொழில் முறைகளை பற்றியும், தொழில் அனுபவங்களை பற்றியும் கருத்துக்கள் பகிரப்படுகிறது.
மதிய உணவு மற்றும் தேநீர் பயிற்சி நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்துடன் தொழில் துவங்க வழிகாட்டுதல் ஆலோசனை வழங்குதல் போன்ற இலவச சேவைகளும் வழங்கப்படுகிறது.
தற்போது Photography & Videography (30 நாட்கள்), செல்போன் பழுது நீக்கும் பயிற்சி (30 நாட்கள்), CCTV நிறுவுதல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சி (13 நாட்கள்), போட்டோ பிரேமிங், லேமினேசன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி (10 நாட்கள்) பயிற்சிகள் துவங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2024. வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், 100 நாள் வேலை அட்டை நகல், PAN Card Copy, TC & Mark Sheet Copy, Bank Pass Book Copy ,Passport Size Photo (2 ) ஆகியவற்றுடன் மேற்கண்ட தேதிக்குள் நேரிலோ (அ) மின்னஞ்சல் (Email) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நெ.143/73, முதல் தளம், இராமலிங்கனார் மெயின் ரோடு, திருவண்ணாமலை-606 601, தொலைபேசி எண் 04175-220-310 மற்றும் 9488589963, 8940647414, 9384108911 ஆகிய அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்
இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
No comments