தடையில்லா சான்று வழங்காததால் வெடிகுண்டு மிரட்டல்

தடையில்லா சான்று வழங்காததால் வெடிகுண்டு மிரட்டல் 

கோயமுத்தூரைச் சேர்ந்தவரை கைது செய்த திருவண்ணாமலை போலீஸ்

தனது நிலத்திற்கு தடையில்லா சான்று வழங்காததால் ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோயமுத்தூரைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். 

தடையில்லா சான்று வழங்காததால் வெடிகுண்டு மிரட்டல்

கடந்த 30ந் தேதி போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஒருவர், இன்னும் சிறிது நேரத்தில் திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. அலுவலகம், செங்கம் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் என சொல்லி போனை வைத்து விட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த அலுவலகங்களில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி விட்டு தீவிர சோதனை நடத்தினர். இதனால் அந்த அலுவலகங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

போலீசார் ஒவ்வொரு இடமாக சல்லடை போட்டு தேடினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் 2 அலுவலங்களிலும் இல்லை. இதனால் ஊழியர்கள் நிம்மதி அடைந்து பணிக்கு திரும்பினர். 

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேடும் பணியில் திருவண்ணாமலை மற்றும் செங்கம் போலீசார் ஈடுபட்டனர். கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு வந்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து கோயமுத்தூரைச் சேர்ந்த கதிர்வேல்(வயது 59) என்பவரை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

தடையில்லா சான்று வழங்காததால் வெடிகுண்டு மிரட்டல்
கதிர்வேல்

இதில் கதிர்வேல் திருவண்ணாமலை-காஞ்சி ரோட்டில் உள்ள ஓரந்தவாடி ஊராட்சியில் 3 வருடம் முன்பு நிலம் வாங்கியிருந்ததாகவும், அதை தற்போது விற்பனை செய்ய தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்திருந்ததாகவும், அந்த சான்று கிடைக்காத விரக்தியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. 

சென்னையைச் சேர்ந்த கதிர்வேல், கோயமுத்தூரில் வசித்து வந்ததும், கொரோனா நேரத்தில் குறைந்த விலையில் ஓரந்தவாடியில் நிலம் கிடைக்கவே அதை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அது டிசி நிலமா? என அதிகாரிகள் விசாரணை நடத்;தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

Next Post Previous Post

No comments