பெண் சாமியார் கொலை செய்யப்பட்டது ஏன்?
பெண் சாமியார் கொலை செய்யப்பட்டது ஏன்?
சாமியார் சொன்ன தகவலால் போலீசார் அதிர்ச்சி
திருவண்ணாமலையில் எனது உயிர் போக வேண்டும் என கூறியதால் பெண் சாமியாரை கழுத்துறுத்து கொலை செய்தேன் என்றும், கடன் தொல்லையால் கொலை செய்தேன் என கைது செய்யப்பட்ட சாமியார் மாறி மாறி சொல்லி போலீசாரை குழப்பினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் அடையாளம் தெரியாத பெண் கழுத்துறுத்து படுகொலை செய்யபட்டுள்ளதாக மாடு மேய்ப்பவர்கள் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். திருவண்ணாமலை எஸ்.பி பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வீராவும் வரவழைக்கபட்டது. அது சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.
போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் கைப்பையில் இருந்த தடயங்களை வைத்து அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புத்தூர் தாலுக்கா மலைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி அலுமேலு(50) என்பதை கண்டுபிடித்தனர்.
தஞ்சன் |
கண்ணமங்கலம் பகுதியில் பொருத்தபட்ட சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து சென்னை குன்றத்தூரில் பதுங்கி இருந்த சாமியார் தஞ்சன்(50) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அலுமேலு, திருவண்ணாமலையில் முக்தியடைய வேண்டும் என்று கூறியதால் கொளத்தூர் ஏரிக்கு அழைத்து சென்று கழுத்தறுத்து கொலை செய்து முகதியடைய வைத்தேன் என்று கூறியுள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதை நம்பாத போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.
அலுமேலுவிடம் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது என்றும், அலுமேலுவிடம் பணத்தை திருப்பி தருவதாக கூறி கண்ணமங்கலம் அருகே உள்ள தனது சொந்த கிராமமான ரெட்டிபாளையம் கிராமத்திற்கு அழைத்து வந்ததாகவும், பிறகு கழுத்தறுத்து கொலை செய்ததாகவும் சாமியார் தஞ்சன் உண்மையை கக்கினார்.
இதையடுத்து கண்ணமங்ககலம் போலீசார் அவரை கைது செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கொலை நடைபெற்று 24 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி. பிரபாகர் பாராட்டினார்.
No comments