23ந் தேதி கார்த்திகை தீப விழா பந்தக்கால் முகூர்த்தம்
23ந் தேதி கார்த்திகை தீப விழா பந்தக்கால் முகூர்த்தம்
டிசம்பர் 13ந் தேதி மகாதீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வருகிற 23ந் தேதி கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிக்கான கொடியேற்றம் நடக்கிறது. டிசம்பர் 13ந் தேதி மகாதீபமாகும்.
திருவண்ணாமலையில் வரலாற்று சிறப்பு மிக்க அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு எல்லை காவல் தெய்வ உற்சவத்துடன் டிசம்பர் 1ந் தேதி தொடங்கி தெப்பல் உற்சவத்தோடு 17ந் தேதி முடிவடைகிறது.
4.12.2024 புதன்கிழமை அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கும் 10 நாள் கார்த்திகை தீபத் திருவிழாவில் 13.12.2024 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், மாலையில் 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது,
திருவண்ணாமலைக்கு சில வருடங்களாக பிற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதால் இந்த வருட தீபத்திருவிழாவை காண பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளை துவங்குவதற்காக பந்தக்கால் நடப்படுவது வழக்கம். இந்த வருடம் வருகிற 23ந் தேதி திங்கட்கிழமை அதிகாலை 5-45 மணியிலிருந்து காலை 7 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் சம்மந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று ராஜகோபுரம் முன்பு நடப்படும்.
File Photo |
அண்ணாமலையார் கோயிலில் வெளியிடப்படும் பத்திரிகைகளில் அறங்காவலர்கள், அதிகாரிகள் பெயர் மட்டுமே இடம் பெறுவது வழக்கம் காலம், காலமாக இருந்து வருகிறது. இது சென்ற வருடத்திலிருந்து மாறி முதல்வர், அமைச்சர் பெயர்கள் இடம் பெற்று வருகின்றன. இந்த வருடம் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பந்தக்கால் பத்திரிகையிலும் முதல்வர் மற்றும் அமைச்சர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments