அமைச்சர் இருந்த இடம் அருகே கொழுந்து விட்டு எரிந்த குப்பை

குப்பை கொட்ட இடமின்றி அல்லாடும் வேங்கிக்கால் ஊராட்சி

ரோட்டில் கொட்டியதால் சுகாதார சீர்கேடு

ஈசான்ய குப்பை கிடங்கை காலி செய்வதில் சிக்கல்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் ரோட்டில் கொட்டப்பட்ட குப்பை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் ஆய்வு செய்த இடம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.

அமைச்சர் இருந்த இடம் அருகே கொழுந்து விட்டு எரிந்த குப்பை

திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிக்கால் வளர்ந்து வரும் பகுதியாக விளங்கி வருகிறது

2011-இல் 8ஆயிரத்து 224 ஆக இருந்த மக்கள் தொகை இன்றைக்கு 25 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இப்பகுதியில் உள்ளன. 

முக்கியமாக கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஸ்டேடியம், ஆர்டிஓ அலுவலகம் இப்படி பல்வேறு அலுவலகங்கள் வேங்கிக்காலில் அமைந்திருக்கின்றன.

வேங்கிக்கால் ஊராட்சியில் தினமும் சேரும் குப்பைகள் 18 டிராக்டர்களில் அள்ளப்பட்டு ஈசானிய குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. குப்பை அள்ளும் பணியில் தினக்கூலி பணியாளர்கள் உள்பட 52 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அமைச்சர் இருந்த இடம் அருகே கொழுந்து விட்டு எரிந்த குப்பை

இந்த நிலையில் ஈசானிய குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. அதற்கு பதில் திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் புனல்காட்டில் புதியதாக அமைக்கப்பட்ட கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டன. ஈசானிய குப்பை கிடங்கில் 60 வருடங்களாக தேங்கியுள்ள குப்பைகளும் காலி செய்யப்பட்டு புனல்காடு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதே போல் வேங்கிக்கால் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையும் புனல் காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில் புனல்காடு பகுதி மக்கள் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து மீண்டும் ஈசானியத்திலே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஈசான்ய குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியும் நிறுத்தப்பட்டது. 

அதே சமயம் வேங்கிக்கால் ஊராட்சி குப்பைகள் ஈசானத்தில் கொட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை இதனால் வேங்கிக்கால் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் 10 நாட்களாக டிராக்டர்களிலே தேங்கின. இதனால் அந்த டிராக்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் அருகே துர்நாற்றம் வீசியது. இதை தொடர்ந்து ஆவின் பாலகம் எதிரே உள்ள ரோட்டின் ஓரம் டிராக்டரில் இந்த குப்பைகள் கொட்டப்பட்டன. இதை கேள்விப்பட்டதும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரோட்டில் குப்பை கொட்ட கூடாது என வேங்கிக்கால் ஊராட்சி பணியாளர்களை அறிவுறுத்தினர். 

அமைச்சர் இருந்த இடம் அருகே கொழுந்து விட்டு எரிந்த குப்பை

இதனால் எங்கே குப்பையை கொட்டுவது என செய்வதறியாது திகைத்த ஊராட்சி பணியாளர்கள் இது பற்றி மேலதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்கள் மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டதின் பேரில் ஒரு நாளைக்கு 5 டிராக்டரில் மட்டுமே ஈசானியத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும். அதுவும் குப்பைகளைப் பிரித்து கொடுக்கும் பணியை அந்த ஊராட்சியே மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனையுடன் அனுமதி அளித்தனர். இதனால் 5 டிராக்டர்கள் குப்பைகள் மட்டுமே ஈசானத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வேங்கிக்காலில் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் திட்டத்தை செயல்படுத்திட தேவையான இடம் வேங்கிக்கால் ஊராட்சியில் இல்லை என்றும், அதனாலேயே குப்பைகள் திருவண்ணாமலைக்கு எடுத்துச் செல்லும் நிலை இருப்பதாகவும் ஊராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டதில் தற்போது வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வாங்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து தான் வாங்கப்படுகிறது, அதேபோல் ஊராட்சிகளும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அனுப்ப வேண்டும், வேங்கிக்கால் ஊராட்சி டிசம்பருக்கு பிறகு (ஊராட்சி தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு) மாநகராட்சியோடு முழுமையாக இணைக்கப்பட்ட பின் இந்த குப்பை கொட்டும் பிரச்சனை தீரும் என்றனர். 

------------------------------------

                                                            வீடியோவை லிங்க் -https://www.facebook.com/share/v/erawNST2zWNP4zU6/?mibextid=oFDknk

அமைச்சர் இருந்த இடம் அருகே கொழுந்து விட்டு எரிந்த குப்பை

---------------------------------------

இந்நிலையில் வேங்கிக்காலில் ரோட்டில் கொட்டப்பட்ட குப்பை நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அருகில் இருந்த ஆவின் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு பணியை மேற்கொண்டிருந்தார். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

Next Post Previous Post

No comments