காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்கள் திருட்டு

காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்கள் திருட்டு

சமூக விரோதிகள் கைவரிசை-பக்தர்கள் அதிர்ச்சி 

திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் விலை உயர்ந்த மரங்களை சமூக விரோதிகள் வெட்டி திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்கள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள காஞ்சி கிராமத்தில் புகழ் பெற்ற குன்றுமேடு வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் ஆடிக்கிருத்திகை திருவிழா விமர்சையாக நடைபெறும். அப்போது பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை வணங்குவர்.

அதே போல் தைப்பூசத்தன்று மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருமண கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பானதாகும்.  

காஞ்சி பாலசுப்பிரமணியர் திருக்கோயில் சுமார் 15 ஏக்கரில் அமைந்திருக்கிறது. கோயிலின் சுற்றுப்புறங்கள் மரங்களால் சூழப்பட்டிருக்கும். இங்கு வேப்ப மரம், புளிய மரம், அரச மரம், பலா மரம், தேக்கு மரம், காட்டுவா மரம் போன்ற பழமை வாய்ந்த விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. 

காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்கள் திருட்டு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக யாருக்கும் தெரியாமல் சமூக விரோதிகள் சிலர் அப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் விலை உயர்ந்த மரங்களை வெட்டி எடுத்துச் சென்றிருப்பதாக  கூறப்படுகிறது. 

மேலும் கடத்திச் செல்வதற்காக சில மரங்கள் வெட்டி கீழே சாய்க்கப்பட்டிருக்கிறது. சில மரங்கள் பாதி வெட்டப்பட்டு எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளது. மரங்கள் வெட்டப்பட்டிருப்பது தெரியாமல் இருப்பதற்காக புதர்களால் மறைக்கப்பட்டுள்ளது. 

காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்கள் திருட்டு

காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்கள் திருட்டு

கோயில் நிலத்தில் இருந்த மரங்கள் திருடப்பட்டது தெரிய வந்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். வனத்துறை கணக்கெடுப்புக்கு பிறகே எவ்வளவு மரங்கள் திருடப்பட்டது? என்னென்ன வகை மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது? போன்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் கூறினர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments