அரசு மருத்துவமனையில் அம்பாசிடர் கார் ஏலம்

அரசு மருத்துவமனையில் அம்பாசிடர் கார் ஏலம்

நேரில் பார்வையிடலாம் என கலெக்டர் தகவல் 

திருவண்ணாமலை கால்நடை மருத்துவமனையில் உள்ள அம்பாசிடர் கார் 20ந் தேதி பொது ஏலம் விடப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

அரசு மருத்துவமனையில் அம்பாசிடர் கார் ஏலம்

திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு, கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கீழ்காணும் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனம் 20.09.2024 அன்று காலை 11.30 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க பொது ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வாகன விவரம்TN 25G 0532 -அம்பாசிடர் கார்

நிபந்தனைகள்: 

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்பிணைத்தொகை ரூ.2400 ரொக்கமாகவோ அல்லது வரைவோலையாகவோ (DD) Regional Joint Director of Animal Husbandry, Tiruvannamalai என்ற பெயரில் எடுத்து செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். 

அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதியில் நடத்தப்படும். ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி, பின் பொருளினை எடுத்துச்செல்ல வேண்டும். ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன்பிணைத்தொகை மீள வழங்கப்பட மாட்டாது. ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணைத்தொகை மீள வழங்கப்படும்.

இந்த ஏலத்தை ரத்து செய்ய, ஏலத்தை நிறுத்தி வைக்க, ஏலத்தை முடித்து வைக்க மண்டல இணை இயக்குநருக்கு முழு அதிகாரம் உண்டு. ஏலம் எடுப்பவர் ஏலத் தொகையுடன் GST 18% (SGST 9% +CGST 9%) சேர்த்து செலுத்தி வாகனத்தினை எடுத்துக் செல்ல வேண்டும். 

திருவண்ணாமலை, கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேற்காணும் வாகனத்தினை அலுவலக வேலை நாட்களில் காலை 11 முதல் மாலை 5 மணிவரை பார்வையிடலாம் 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-------------------------------------


Next Post Previous Post

No comments