1330 திருக்குறளையும் ஒப்பிவித்தால் ரூ.15 ஆயிரம் பரிசு

 1330 திருக்குறளையும் ஒப்பிவித்தால் ரூ.15 ஆயிரம் பரிசு

1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

1330 திருக்குறளையும் ஒப்பிவித்தால் ரூ.15 ஆயிரம் பரிசு

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நேராய்வில் கலந்து கொண்டு 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த நேராய்வில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும். இந்நேராய்வில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றைத் தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

1330 திருக்குறளையும் ஒப்பிவித்தால் ரூ.15 ஆயிரம் பரிசு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப்  பரிசைப் பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 20.09.2024-ந் தேதிக்குள் அளிக்கலாம். 

இவ்வாறு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments