எஸ்.சி,எஸ்.டியினருக்கு பிரபல கம்பெனியில் பயிற்சி, வேலை

எஸ்.சி,எஸ்.டியினருக்கு பிரபல கம்பெனியில் பயிற்சி, வேலை

நிரந்தர வேலை வாய்ப்புடன் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் பெற வாய்ப்பு 

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் 

எஸ்.சி,எஸ்.டியினர் பிரபல கம்பெனியான எச்.சி.எல்லில் பயிற்சியும், ரூ.70 ஆயிரம் வரை சம்பளத்துடன் நிரந்தர வேலைவாய்ப்பும் பெறலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

எஸ்.சி,எஸ்.டியினருக்கு பிரபல கம்பெனியில் பயிற்சி, வேலை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக  2022-23  மற்றும் 2023-24  ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி  பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, HCL நிறுவனத்தில்  வேலை வாய்ப்புடன் கூடிய  பட்டப்படிப்பு  (B.Sc Computing Desgining, B.Com,BCA&BBAபடித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

HCL  Techbee “Early Career Programme” மூலமாக  பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின இனத்தை  சார்ந்தவருக்கு சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப  நிறுவனத்தில் பணியினை துவங்க HCL Technologies-ல் ஓரு வருடகால பயிற்சி அளித்து  நிரந்தர வேலைவாய்ப்புடன்  ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ் பிலானி கல்லுரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர்  மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு , அமிட்டி பல்கலைகழகத்தில் BCA/ BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டபடிப்புகளில் சேர்ந்து படித்திட வாய்ப்பு பெற்று தரப்படும்.

எஸ்.சி,எஸ்.டியினருக்கு பிரபல கம்பெனியில் பயிற்சி, வேலை

இதற்கான தகுதிகள் 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த மாணவ,மாணவிகளாக  இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022-23 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். ஒரு வருட பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூபாய் 17,000 முதல் ரூபாய் 22,000  வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூபாய் 50,000  முதல் ரூபாய் 70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். 

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com  என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments