திருவண்ணாமலை:மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை:மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு 

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.                                                      

திருவண்ணாமலை:மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு

பணியிட விவரம்

1) உடலியக்க மருத்துவர் ( Physiotherapist)

தகுதி

ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிசியோதெரபி (Bachelor of Physiotherapy) (BPT) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

பணியிடம்- 2

மாத ஊதியம்- ரூ.13 ஆயிரம் 

2) பல்நோக்கு சுகாதார பணியாளர்/துணை செவிலியர்

தகுதி

இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிப்பட்டு, அரசு அனுமதி பெற்ற நர்சிங் கல்லூரிகளில் ஜிஎன்எம்/ஏஎன்எம்-ல் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்- 1  

மாத ஊதியம்- ரூ. 14 ஆயிரம் 

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

1. கல்வித் தகுதி சான்று. 2. மதிப்பெண் சான்று. 3. சாதிச்சான்றிதழ்

அரசு மருத்துவ கல்லூரியில் வேலை


பதவியின் பெயர் 

ஒலியியல் வல்லுநர் (ஆடியோலஜிஸ்ட்) மற்றும் பேச்சு சிகிச்சையாளர்

தகுதி

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பேச்சில் இளங்கலை பட்டம் மற்றும் ஏதேனும் இருந்து மொழி நோயியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணியிடம்- 1

மாத சம்பளம்- ரூ.23 ஆயிரம்

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

1. கல்வித் தகுதி சான்று. 2. மதிப்பெண் சான்று.

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) 

துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,

திருவண்ணாமலை.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 10.08.2024 அன்று மாலை 5 மணிக்குள்.

நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இத்தகவலை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

--------------------------------------------