கிரிவலப்பாதை:கூல்டிரிங்ஸ் கடைகளில் கலெக்டர் சோதனை
கிரிவலப்பாதை:கூல்டிரிங்ஸ் கடைகளில் கலெக்டர் சோதனை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைகளில் கலெக்டர் சோதனை நடத்தினார்.
ஆவணி மாத பவுர்ணமி நாளை தொடங்குகிற நிலையில் விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வழக்கம் போல் கிரிவலப்பாதை நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (18.08.2024) கிரிவலப்பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கிரிவல பாதையில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமாக ஊரக வளர்ச்சி பணியாளர்களை கொண்டு சில்வர் டம்ளர்கள் மூலமாக குடிநீர் வழங்கும் புதிய நடைமுறையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் உள்ள கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பாக இருக்கைகள் போட்டு நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் சாலைக்கு எதிர்புறமாக இருக்ககூடிய இடங்களில் கடைகளை வைக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், கிரிவலப்பாதையில் உள்ள கடைகளில் குளிர்பானங்களை ஆய்வு செய்தார். குளிர்பானங்களின் காலாவதி தேதி மற்றும் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகளுக்கு ஆய்வு செய்வதற்கு அனுப்பி வைக்கவும், குளிர்பானங்கள் தரமாக இல்லாதபட்சத்தில் விற்பனையாளர் மீது அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கவும் உணவு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தன்னார்வ அமைப்புகள் கிரிவலப்பாதையை ஆக்கிரமித்து அன்னதானம் வழங்குவதை தவிர்த்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அன்னதானம் கூடம் அமைத்து வழங்கவும் உத்தரவிட்டார்.
கலெக்டருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments