முதன்முறையாக முன்னாள் படைவீரர்களுக்கு இ-சேவை மையம்
முதன்முறையாக முன்னாள் படைவீரர்களுக்கு இ-சேவை மையம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கென இ-சேவை மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் தமிழகத்திலேயே முதன் முறையாக முன்னாள் படை வீரர்களுக்கென இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அ.வெ.சுரேஷ் நாராயணன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பம்சங்கள்
முன்னாள் படை வீரர்களுக்கென தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்த இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தரைப்படை, கடற்படை, விமானப்படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளில் பணியாற்றி வெளி வந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
முன்னாள் படைவீரர்கள், விதவையர்களுக்கு அடையாள அட்டை விண்ணப்பம், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பம், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பம், முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்வி நிலையங்களில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று கோரும் விண்ணப்பம், முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண நிதியுதவிக்கான விண்ணப்பம், மத்திய அரசின் வறிய நிலையில் உள்ள ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள், விதவையர்களுக்கு வறியோர் நிதியுதவிக்கான விண்ணப்பம் போன்ற மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பம் இலவசமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இச்சேவை மூலமாக ஆரணி, கண்ணமங்கலம், போளுர், வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சுமார் 4,500-க்கும் மேலான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் பயன்பெறுவார்கள்.
No comments