கிரிவலப்பாதையில் 100 மீட்டருக்கு ஒரு பணியாளர் நியமனம்

கிரிவலப்பாதையில் 100 மீட்டருக்கு ஒரு பணியாளர் நியமனம்

நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக்க கலெக்டர் நடவடிக்கை-கடை வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை 

கிரிவலப்பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக்க 100 மீட்டர் இடைவெளியில் ஒரு பணியாளர் நியமிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

ஆவணி மாத பவுர்ணமியானது நாளை மறுநாள் 19ந் தேதி திங்கள்கிழமை அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20ந் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 1.02 மணிக்கு முடிவடைகிறது.

அன்றைய தினம் திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.  

கிரிவலப்பாதையில் 100 மீட்டருக்கு ஒரு பணியாளர் நியமனம்

பவுர்ணமி அன்று சாமி தரிசனம் செய்ய மற்றும் கிரிவலம் செல்ல வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு  அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து சீரமைத்தல், தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தல், தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்துதல், 14 கி.மீ  கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்துதல், கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துதல், வரிசையில் செல்ல ஏற்பாடு செய்தல், கழிவறை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் குறித்து மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார். 

மேலும் கிரிவலப்பாதையில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், நடைபாதைகளில் கடைகள் வைப்பதை தடுக்கும் பொருட்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 100 மீட்டர் இடைவெளியில் ஒரு பணியாளரை நியமித்து கண்காணித்திட வேண்டுமெனவும், கிரிவலப்பாதை மற்றும் கோயில் உட்புரத்தில் மருத்துவ முகாம் அமைத்திடவும், தேவையான இடங்களில் 108 அவசரகால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். 

நடைபாதை நடப்பதற்கு மட்டுமே என்பதை தெரியப்படுத்தும் வகையில் பதாகைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கே.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கிரிவலப்பாதையில் 100 மீட்டருக்கு ஒரு பணியாளர் நியமனம்

கிரிவலப்பாதையில் 100 மீட்டருக்கு ஒரு பணியாளர் நியமனம்

கிரிவலப்பாதையில் 100 மீட்டருக்கு ஒரு பணியாளர் நியமனம்
நடைபாதை கடைகளை அகற்றும்
நெடுஞ்சாலைத்துறையினர்(file photo)

தேவையில்லாத நடைபாதை

கிரிவலப்பாதையில் டைல்ஸ் நடைபாதை தேவையில்லை, அதற்கு பதிலாக தார் சாலையை அகலப்படுத்தினாலே போதுமானது என நடைபாதை அமைக்கும் போதே கோரிக்கைகள் எழுந்தது. ஆனால் இதையெல்லாம் காதில் வாங்காத மாவட்ட நிர்வாகம் டைல்ஸ் நடைபாதையை அமைத்து விட்டது. இப்போது நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. பவுர்ணமி நாட்களில் கடைகாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி உள்ளது. சென்ற பவுர்ணமியில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரடியாக சென்று கடைகளை அகற்றினாலும் அவர்கள் சென்றதும் மீண்டும் கடைகள் போடப்படுகிறது. இதனால் இந்த நடைபாதையை பக்தர்கள் பயன்படுத்தாத நிலை உள்ளது. 

Next Post Previous Post

No comments