ஆடிப்பூரம்:சிவன் கோயிலில் எங்கும் இல்லாத தீ மிதி விழா

ஆடிப்பூரம்:சிவன் கோயிலில் எங்கும் இல்லாத தீ மிதி விழா

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா நிறைவு

கை நிறைய வளையோடு அம்மன் காட்சி

போட்டி போட்டு வளையலை வாங்கிச் சென்ற பெண்கள் 

சிவன் கோயிலில் எங்கும் இல்லாத தீ மிதி விழா அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது. முன்னதாக ஆடிப்பூரத்தை முன்னிட்டு கை நிறைய வளையல்களோடு அம்மன் காட்சியளித்தார்.  

ஆடிப்பூர வரலாறு

ஆடிப்பூரம் உருவான வரலாற்றை இப்படி விவரிக்கிறார் பக்தியாத்ரா நிர்வாகி

'உலகத்தில் உள்ள எல்லா சக்தியும் பராசக்தியின் அம்சம். பார்வதி, சரஸ்வதி ஸ்ரீதேவி, பூதேவி எல்லாம் அவளுடைய ரூபங்கள் தான். அவளுடைய மூன்று அவதாரங்களை பார்ப்போம். முதலாவதாக அம்பிகையின் பிறப்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் என்ற விஷ்ணு பக்தர் தினமும் மாலை கட்டி அதை பெருமாளுக்கு சாத்தி கைங்கரியம் செய்து வந்தார். அவரது  வீட்டு பக்கத்தில் துளசி செடியில்; பூமாதேவி கை குழந்தையாக கிடைத்தார். குழந்தை இல்லாத பெரிய ஆழ்வார் கோதை என பெயர் சூட்டி வளர்த்தார்.

ஆழ்வாரை போலவே மகள் கோதையும் கண்ணன் மீது காதலோடும், பக்தியோடும் இருந்தாள். மங்கையான பிறகு அவளை அந்த ரங்கநாதரே திருமணம் செய்து கொண்டார். இன்றைக்கும் விஷ்ணு கோயில்களில் அவளைத்தான் நாம் ஆண்டாள் நாச்சியாராக வணங்குகிறோம். அந்த ஆண்டாள் நாச்சியார் பிறந்தநாள் தான் ஆடிப்பூரம். 

இரண்டாவது அம்பிகையின் பூப்பூனைதல் விழா. பராசக்தி காசியில் விசாலாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும்,   நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சியாகவும் ஆட்சி செய்கிறார். ஆடிப்பூரத்தன்று நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயிலில் வயதுக்கு வந்த பெண்ணுக்கு செய்யும் சடங்குகள் போல் அம்மனுக்கு நலங்கு வைத்து கொண்டாடுவார்கள்.

மூன்றாவதாக அம்பிகையுடன் வளைகாப்பு. லோகமாதாவான அந்த ஆதிசக்தி உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தாய். அவளுக்கு விநாயகர், முருகன் என இரண்டு பிள்ளைகள். ஆனால் அவர்கள் அவளுடைய கருவில் இருந்து வரவில்லை. அதனால் மாசமான பெண் போல் இருக்க முடியவில்லையே என அம்பிகைக்கு ஏக்கம். இதை தெரிந்து கொண்ட ஸ்ரீதேவியும், சரஸ்வதியும் தேவர்களோடு வந்து திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அவளை பூரிக்க வைத்தார்கள். 

அம்பாள் கர்ப்பிணியாக காட்சியளிப்பதற்காக அவளுடைய மடியில் முளைப்பாரி கட்டி, பல வகையான பலகாரங்களை ஊட்டி ஆனந்தப்படுத்தினார்கள். அவளுக்கு வளைகாப்பு நடந்த நாள் ஆடிப்பூரம். பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்தது பங்குனி உத்திரத்தில். இது மார்ச் கடைசியில் வரும். அங்கிருந்து ஆடிப்பூரத்தை கணக்கிட்டால் ஐந்தாவது மாதம் ஆரம்பிக்கும். பொதுவாகவே பெண்களுக்கு ஐந்தாவது மாதம், ஏழாவது மாதம், ஒன்பதாவது மாதம் வளைகாப்பு நடைபெறும்' 

இவ்வாறு அவர் கூறினார். 

பங்குனி உத்திரம் முடிந்து ஐந்தாவது மாதமான நேற்று ஏழாம் தேதி ஆடிப்பூரத்துக்கான நல்ல நேரமான காலை 9.15 மணி முதல் 10.15 வரையிலும் மாலை 4.45 மணி முதல் 5.45 வரையிலும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  

பல்வேறு கோயில்களில் அம்மனுக்கு அலங்காரம் செய்து வளையல் மாலை போட்டு சந்தன நலங்கு வைத்து, இனிப்பு பலகாரம் படைத்து தீப தூப ஆராதனை செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து பூஜை செய்தனர். இந்த வளையலை அணிந்தால் திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். 


ஆடிப்பூரம்:சிவன் கோயிலில் எங்கும் இல்லாத தீ மிதி விழா

ஆடிப்பூரம்:சிவன் கோயிலில் எங்கும் இல்லாத தீ மிதி விழா

ஆடிப்பூரம்:சிவன் கோயிலில் எங்கும் இல்லாத தீ மிதி விழா

ஆடிப்பூரம்:சிவன் கோயிலில் எங்கும் இல்லாத தீ மிதி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு கல்யாணம் நடைபெற வேண்டும் என வேண்டி வளையல் போட்டால் கல்யாண வளையல் யோகத்தை தரும் என்பதும், குழந்தை வேண்டும் என நினைத்து வளையல் போட்டால் வளைகாப்பு நடத்தக் கூடிய யோகமும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

இதனால் நேற்று நடைபெற்ற ஆடிப்பூர வளைகாப்பின் போது பராசக்திக்கு வளையல் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் அம்மன் கைகளில் வளையலை வைத்து படைத்து எடுத்துச் சென்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீமந்தமும் நடத்தி வைக்கப்பட்டது.

நள்ளிரவு தீ மிதி விழா நடைபெற்றது. தீ குண்டம் மூட்டிய போது மழை பெய்தது. இதையடுத்து கோயில் ஊழியர்கள் கூடுதலாக விறகு கட்டைகளை அடுக்கி தீ அணையாமல் இருப்பதற்கு ஏற்பாடு செய்தனர். குலாலர் வம்சத்தினர் தீ மிதித்தனர். சிவன் கோயில்களில் திருவண்ணாமலையில் மட்டுமே தீ மிதி விழா நடைபெறுவது சிறப்பானதாகும். குலாலர் வம்சத்தினர் (உடையார்) மட்டுமே தீ குண்டத்தில் இறங்கும் உரிமையை பெற்றவர்கள் ஆவர்.

புராண கதை

குலாலர் இனத்தவர் தட்சன். இவரது மகளான தாட்சாயினி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானை நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது.

ருத்திர அவதாரம்

தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.

இதனை அறிந்த தாட்சாயினி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட தாட்சாயினி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.

இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார் என்பது வரலாறு. 

இதன் காரணமாக குலாலர் வம்சத்தினர் உலக நன்மைக்காகவும், நோய், நொடி தீரவும், அக்னி ரூபத்தில் திருவண்ணாமலையில் அருள்பாலித்து வரும் ஈசனின் அருள் வேண்டியும் தீ மிதித்து வருகின்றனர். மேலும் வருடம் முழுவதும் அண்ணாமலையார் கோயிலுக்கு தேவையான மண்பாண்ட பொருட்களை குறிப்பாக அகல் விளக்குளை வழங்கி வருகின்றனர்.

படங்கள்- பார்த்திபன்

----------------------------------------

வீடியோவை காண...

https://www.facebook.com/share/r/kHSjeVYEa7yTrct4/?mibextid=WooXLz

Next Post Previous Post

No comments