4 சக்கர வானங்கள் உள்பட 34 போலீஸ் வாகனங்கள் ஏலம்

4 சக்கர வானங்கள் உள்பட 34 போலீஸ் வாகனங்கள் ஏலம்

எஸ்.பி அலுவலகத்தில் நடக்கிறது.- நுழைவு கட்டணம், முன்பணம் கட்டியவர்களுக்கு மட்டுமே அனுமதி 

திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் காவல்துறைக்கு சொந்தமான 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்களுக்கான ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட (பயன்பாட்டிற்குப் பிறகு நிராகரிக்கப்பட்டவை) பலதரப்பட்ட 34 காவல் வாகனங்கள் (24 இருசக்கர வாகனம், 10 நான்கு சக்கர வாகனங்கள்) உள்ளன. அந்த காவல் வாகனங்கள் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி பொது ஏலம் விடப்பட உள்ளது. 

4 சக்கர வானங்கள் உள்பட 34 போலீஸ் வாகனங்கள் ஏலம்

6-9-2024-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இந்த ஏலம் நடைபெறும். 

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், நுழைவு கட்டணமாக ரூ.100/-ம் முன்பணமாக இருசக்கர வாகனத்திற்கு ரூ.1,000/-மும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2,000/-மும், செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். 

3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலத்தில் கலந்து கொள்ள ரசீது வழங்கப்படும். மேலும், இருசக்கர வாகனம் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும், ஏலத்தொகையுடன் 12சதவீதம் (GST) சரக்கு மற்றும் சேவை வரியும், நான்கு சக்கரவாகனம் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும், ஏலத்தொகையுடன் 18சதவீதம் (GST) சரக்கு மற்றும் சேவை வரியும், சேர்த்து உடனே செலுத்த வேண்டும். 

ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும், ஏல ரசீது எந்த பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் மற்றும் அவர் பெயரிலேயே வாகனத்திற்கு உண்டான உரிமை ரசீது வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளரை அவரது அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். அலுவலக தொலைபேசி எண்: 8870486926. 

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

-------------------------------------------


Next Post Previous Post

No comments