வாரிசுக்கு தானசெட்டில்மெண்ட்:இந்த வார்த்தையை குறிப்பிடுங்கள்

வாரிசுக்கு தானசெட்டில்மெண்ட்:இந்த வார்த்தையை குறிப்பிடுங்கள்

கலெக்டர் தகவல்- மூத்த குடிமக்கள் சேவைகளை பெற உதவி எண் அறிவிப்பு 

வாரிசுகளுக்கு தானசெட்டில்மெண்ட் எழுதும் மூத்த குடிமக்கள் முக்கியமான ஒரு வார்த்தையை குறிப்பிட்டு எழுத வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் குறித்து திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

வாரிசுக்கு தானசெட்டில்மெண்ட்:இந்த வார்த்தையை குறிப்பிடுங்கள்

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு நலச் சட்டம், 2007, என்பது பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு பராமரிப்பு மற்றும் நலனை பேண அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படவாறு, சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது. 

தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு விதிகளும் 31.12.2009 அன்று உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைந்து தீர்ப்பதற்காகவும், குழந்தைகள், சட்டப்பூர்வ வாரிசுகளிடம் இருந்து மூத்த குடிமக்கள், பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையைப் பெற, ஒவ்வொரு துணை கோட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் கோட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நல அலுவலர், பராமரிப்பு அலுவலராகவும், சமரச அலுவலராகவும் செயல்பட்டு வருகிறார். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. 


வாரிசுக்கு தானசெட்டில்மெண்ட்:இந்த வார்த்தையை குறிப்பிடுங்கள்

பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் தங்களது வாரிசுகளுக்கு எழுதும் தானசெட்டில்மெண்ட் பத்திரத்தில் தங்களது காலத்திற்கு பிறகு தானசெட்டில்மெண்ட் பத்திரம் செல்லும் என்பது குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். மாதாந்திர வாழ்க்கைப்படி வேண்டி, இந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் 90 நாட்களுக்குள் தீர்க்கப்படும். குழந்தைகள் அல்லது உறவினர்கள் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியத் தவறினால், தீர்ப்பாயம் அபராதம் விதிக்கலாம். 

இந்தியா முழுவதும் மூத்த குடிமக்கள் உதவி எண் '14567' 28.04.2021 அன்று துவக்கப்பட்டு அனைத்து நாட்களிலும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மீட்பு உதவி, முதியோர் இல்லங்கள், முதியோர் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனை, சட்ட வழிகாட்டுதல் போன்ற சேவைகளை வழங்குவதற்காக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது 

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

Next Post Previous Post

No comments