திருவண்ணாமலை ஆகாஷ் பஸ் தீப்பிடித்து எரிந்தது

 திருவண்ணாமலை ஆகாஷ் பஸ் தீப்பிடித்து எரிந்தது

திருவண்ணாமலையிலிருந்து கோயமுத்தூருக்கு சென்ற ஆகாஷ் ஆம்னி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பஸ்சுக்குள் இருந்த பயணிகள் எகிறி குதித்து தப்பிதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

திருவண்ணாமலை ஆகாஷ் பஸ் தீப்பிடித்து எரிந்தது

திருவண்ணாமலையில் உள்ள ஆகாஷ், அர்ப்பனா, ஆகாஷ் இன் போன்ற ஓட்டல்களை நடத்தி வரும் நிறுவனம், ஆம்னி பஸ்களையும் இயக்கி வருகிறது. இந்த டிராவல்ஸ் அலுவலகம், திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில் இயங்கி வருகிறது. 

கோயமுத்தூர்-பெங்களுர், திருவண்ணாமலை-கோயமுத்தூர், திருவண்ணாமலை-திருச்செந்தூர், திருவண்ணாமலை-மதுரை, திருவண்ணாமலை-திருநெல்வேலி, திருவண்ணாமலை-திருப்பூர், திருவண்ணாமலை-தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு இந்நிறுவனம் ஆம்னி பஸ்களை இயக்கி வருகிறது. 

திருவண்ணாமலை ஆகாஷ் பஸ் தீப்பிடித்து எரிந்தது

திருவண்ணாமலையிலிருந்து நேற்று கோயமுத்தூருக்கு புறப்பட்ட ஆகாஷ் நிறுவன அதிகாலை கோவை பீளமேடு பகுதிக்கு சென்றது. அப்போது பஸ்சின் சில பகுதிகளில் தீப்பிடித்தது. இதைப்பாத்த பஸ் டிரைவர் உடனடியாக பயணிகளை இறங்க சொன்னார். பஸ்சுக்குள் இருந்த 30 பயணிகளும் பத்திரமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

இந்நிலையில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. பஸ்சுக்குள் இருந்த பயணிகளின் உடமைகள் தீக்கிரையாகின. இதே போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு சென்ற ஆம்னி பஸ்சும் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆகாஷ் பஸ் தீப்பிடித்து எரிந்தது சம்மந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Post Previous Post

No comments