திருவண்ணாமலை நகைக்கடை அதிபரின் மகன்கள் கடத்தல்

திருவண்ணாமலை நகைக்கடை அதிபரின்  மகன்கள் கடத்தல்

துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்த போலீசார்

அடகு கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

பெங்களுர் தாதாவிற்கு வலைவீச்சு 

திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடை அதிபர் மகன்களை காரில் கடத்திச் சென்றவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

திருவண்ணாமலை நகைக்கடை அதிபரின் மகன்கள் கடத்தல்

திருவண்ணாமலை அசலியம்மன் கோயில் தெருவில் ஜெயின் ஜூவல்லரி என்ற நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் நரேந்திரகுமார். இவரது மகன்கள் ஜித்தேஷ், ஹரிஹந்த். இவர்களது வீடு அய்யங்குளத் தெருவில் உள்ளது. நேற்று இரவு கடையை பூட்டிக் கொண்டு ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகியோர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல் அவர்களை அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்றது. பிறகு அந்த கும்பல் நரேந்திரகுமாரை தொடர்பு கொண்டு ரூ.70 லட்சம் கொடுத்தால் அவர்களது மகன்களை விட்டு விடுவதாக கூறினார்களாம். அதற்கு நரேஷ்குமார் ரூ.10 லட்சம்தான் இருப்பதாக கூறினாராம். 

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை-திருக்கோயிலூர் ரோடு ரிங் ரோடுக்கு வரும்படி கடத்தல்காரர்கள் சொன்னதால் பணத்தை எடுத்துக் கொண்டு நரேஷ்குமார் சென்றார். இதுபற்றி போலீசுக்கு தெரிய வந்தது. அவர்களும் அவரை பின்தொடர்ந்து சென்றனர். 

திருவண்ணாமலை நகைக்கடை அதிபரின் மகன்கள் கடத்தல்

ரிங்ரோட்டில் பணத்தை பெற்றுக் கொண்ட கடத்தல் கும்பல் ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகியோரை விடுவித்து விட்டு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. உடனே போலீசார் அவர்களை துரத்திச் சென்றனர். மேல் செங்கம் அருகே காரை மடக்கி அதில் இருந்த திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவைச் சேர்ந்த அடகு கடை உரிமையாளர் ஹன்ஸ்ராஜ், பெங்களுரைச் சேர்ந்த விக்ரம், வாசிம், மனோ என்கிற கபாலி ஆகிய 4 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 



தப்பி ஓடிய பெங்களுரைச் சேர்ந்த தாதா பில்லா, பறையம்பட்டைச் சேர்ந்த பிரவீன், அண்ணாமலை, சீனு, ராஜ்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். 

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதில் ஹன்ஸ்ராஜிக்கும், ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகியோருக்கும் இடையே பணம் மற்றும் தங்கம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததே கடத்தலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

இது சம்மந்தமாக போலீசார் ரூ.10 லட்சத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.  

இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Post Previous Post

No comments