எஸ்.சி., எஸ்.டி பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு

எஸ்.சி., எஸ்.டி பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். 

எஸ்.சி., எஸ்.டி பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 35 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் மற்றும் 11 பட்டதாரி காலிப்பணியிடங்கள் உள்ளன. இது குறித்த விவரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. 

இப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக முற்றிலும் தொகுப்பூதிய முறையில், தற்காலிகமாக நிபந்தனை அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்-1 மற்றும் தாள்- 2 ல் (TNTET Paper I &II) தேர்ச்சி  பெற்றவர்கள் மட்டும் நிரப்பப்படவுள்ளது.  இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடம் தற்போதைய  நடைமுறையிலுள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு

நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் பதவி உயர்வு வாயிலாக  நிரப்பப்படும் வரை அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்விற்கு முந்தைய மாதம் வரை இவற்றில் எது முன்னரோ அது வரை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள வேண்டும். 

இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் எழுத்து மூலம் விண்ணப்பத்தை உரிய சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சலிலோ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு ஜீலை 6ம் தேதி மாலை  5.45 மணிக்குள்  சேருமாறு அனுப்ப  வேண்டும்.  

பழங்குடியினர் பள்ளி 

2024 - 2025 ஆம் கல்வி ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை பட்டதாரி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம்  பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வி ஆண்டு இதில் எது முன்னரோ அதுவரையில் தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19ன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் -8 (தமிழ், ஆங்கிலம், தாவரவியல், இயற்பியல் (முறையே ஒரு காலிப்பணியிடம்) கணிதம், பொருளியல் முறையே 2 காலிப்பணியிடம்). பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் -17 (தமிழ்-1, ஆங்கிலம்- 4, கணிதம்-6, அறிவியல் -4, சமூக அறிவியல் -2). இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் 34.

முன்னுரிமை: பழங்குடியினர் - பழங்குடியினர் இல்லாத பட்சத்தில் ஆதிதிராவிடர்களுக்கு, ஆதிதிராவிடர்கள் இல்லாத பட்சத்தில் இதர வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு

விண்ணப்பிக்கும் முறை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து மூலமான விண்ணப்பத்தினை நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலுள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மின்னஞ்சல் முகவரி: potwtvm@gmail.com

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ரூ.18 ஆயிரம் ஆகும். விண்ணப்பம் ஒப்படைக்க கடைசி நாள் 15.07.2024, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரம், விண்ணப்பம் ஒப்படைக்க கடைசி நாள் 08.07.2024, இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம் ஆகும். விண்ணப்பம் ஒப்படைக்க கடைசி நாள் 08.07.2024 ஆகும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

Next Post Previous Post

No comments