ரிஜிஸ்டர் ஆபீசில் ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணம்
ரிஜிஸ்டர் ஆபீசில் ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணம்
லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல்
திருவண்ணாமலையில் ரிஜிஸ்டர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சில தினங்களுக்கு முன் வேட்டவலம் ரோட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம்-2ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.76 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கூகுள் பே மூலம் பணம் பறிமாற்றம் குறித்தும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் போளுர் ரோட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம்-1ல் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் ஜன்னல் வழியாக பணத்தை எடுத்து வீசினார். இதைப் பார்த்த போலீசார் அந்த பணத்தை கைப்பற்றினர். பணத்தை வீசிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார் பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள், பத்திர எழுத்தர்களிடமும் விசாரணை நடைபெற்றது. இது தவிர கூகுள் பே மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments