ஆசிரியர்கள் என்ற பேரில்...கலெக்டர் திடீர் எச்சரிக்கை

ஆசிரியர்கள் என்ற பேரில்...கலெக்டர் திடீர் எச்சரிக்கை 

ஆசிரியர்கள் என்ற பேரில் மாணவ, மாணவிகளுக்கு நோட்ஸ் தயார் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆசிரியர்கள் என்ற பேரில்...கலெக்டர் திடீர் எச்சரிக்கை

இது சம்மந்தமாக திருவண்ணாமலை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு, அவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து கல்வித்துறை ஊக்கப்படுத்தி வருகிறது. 

மேலும், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்ஸ் தயார் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக புகார் வருவதை தொடர்ந்து,  ஆசிரியர்கள் என்ற பேரில் தயார் செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவர்கள் இதுபோன்று அங்கீகரிக்கப்படாத நோட்ஸ்களை வாங்கி பாதிக்கப்பட வேண்டாம் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேற்கண்டபடி புகார்கள் வரப்பெற்றால் பள்ளி கல்வித்துறை மூலம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

--------------------------------------


Next Post Previous Post

No comments