அருணை கல்லூரி பஸ் மோதி தொழிலாளி தலை நசுங்கி சாவு

அருணை கல்லூரி பஸ் மோதி தொழிலாளி தலை நசுங்கி சாவு

திருவண்ணாமலை அருகே அருணை பஸ் மோதி கூலி தொழிலாளி தலை நசுங்கி இறந்தார். 

அருணை கல்லூரி பஸ் மோதி தொழிலாளி தலை நசுங்கி சாவு

இது பற்றிய விவரம் வருமாறு,

திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு தவசியார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார்(வயது 28) கூலி தொழிலாளி. மனைவி பெயர் திவ்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது திவ்யா கர்ப்பிணியாக உள்ளார். 

இன்று சுனில்குமார் ரிங் ரோடு, எடப்பாளையம் ஏரி, நந்தி சிலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அருணை கல்லூரியின் பஸ் அவர் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரம் ஏறியதால் சுனில்குமார் அதே இடத்தில் தலை நசுங்கி இறந்தார். 

தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கணவனின் உடலை பார்த்து கர்ப்பிணி மனைவியும் மற்றும் உறவினர்களும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார், அருணை கல்லூரியின் பஸ் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.