32 குளங்கள் காணாமல் போனதா? கலெக்டர் நேரில் ஆய்வு

 32 குளங்கள் காணாமல் போனதா? கலெக்டர் நேரில் ஆய்வு 

குப்பை கொட்டும் இடமாகவும், வறண்ட நிலையிலும் காணப்பட்ட குளங்கள்- அரசு நூலகத்திற்கு சிக்கல் 

திருவண்ணாமலையில் 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக தொடரப்பட்டில் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  

32 குளங்கள் காணாமல் போனதா? கலெக்டர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலையில் 138 குளங்களில் 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. வருகிற 22ந் தேதி மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடக்கிறது. 

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், இன்று மாலை முதல் கட்டமாக சில குளங்களை ஆய்வு செய்தார். இடுக்குபிள்ளையார் கோயில் அருகே எல்லை குளம், குபேரக் கோவில் தீர்த்தகுளம், வரட்டுக்குளம், ஆடையூர் தீர்த்த குளம், வாயுலிங்க குளம், திருக்குளம், மாணிக்கவாசகர் குளம்  ஆகிய குளங்களை பார்வையிட்டார். 

32 குளங்கள் காணாமல் போனதா? கலெக்டர் நேரில் ஆய்வு

அப்போது அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் உள்ள குளம் வறண்டு போய் குப்பை கொட்டும் இடமாக காட்சியளித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதே போல் சில குளங்கள் இருந்தன. மேலும் கிரிவலத்திற்கு வரும் பக்தர்கள் தாங்கள் அணிந்து வரும் டவுசர், சாக்ஸ் ஆகியவற்றை பல இடங்களில் தூக்கி வீசியிருந்தனர். இதிலிருந்து தூர் நாற்றம் வீசியது. இதை பார்த்த கலெக்டர் குப்பைத் தொட்டியை பக்தர்கள், பயன்படுத்திட வழிவகை செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

32 குளங்கள் காணாமல் போனதா? கலெக்டர் நேரில் ஆய்வு

32 குளங்கள் காணாமல் போனதா? கலெக்டர் நேரில் ஆய்வு

குளங்களின் நிலை குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார். கலெக்டருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் அலுவலர்கள் சென்றிருந்தனர். 

32 குளங்கள் காணாமல் போனதா? கலெக்டர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் சண்முகா பள்ளி எதிரில் உள்ள குளம் ஆக்கிரமிக்கப்பட்டு மாவட்ட அரசு மைய நூலகம் கட்டப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு வழக்கால் இந்த கட்டிடத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

---------------------------------------


Next Post Previous Post

No comments