இந்தியா கூட்டணி வெற்றிக்கு முதல் காரணம் ஸ்டாலின்

இந்தியா கூட்டணி வெற்றிக்கு முதல் காரணம் ஸ்டாலின்

எ.வ.வேலு பேட்டி 

இந்தியா கூட்டணி வெற்றி என்று சொன்னாலும் கூட அதற்கு முழுக்க முழுக்க முதல் காரணம் ஸ்டாலின் தான் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

இந்தியா கூட்டணி வெற்றிக்கு முதல் காரணம் ஸ்டாலின்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று இரவு முடிவடைந்தது. 

இறுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 931 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் விவரம் வருமாறு, 

இந்தியா கூட்டணி வெற்றிக்கு முதல் காரணம் ஸ்டாலின்

சி.என்.அண்ணாதுரை(திமுக) - 5 லட்சத்து 47 ஆயிரத்து 379



எம்.கலியபெருமாள்(அதிமுக) – 3 லட்சத்து 13 ஆயிரத்து 448



ஏ.அஸ்வத்தாமன்(பாஜக) – 1 லட்சத்து 56 ஆயிரத்து 650



ஆர்.ரமேஷ்பாபு(நாம் தமிழர்) – 83 ஆயிரத்து 869

அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் பெயர் கொண்ட சுயேட்சை வேட்பாளர்கள்  பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு, 

எம்.கலியபெருமாள்(சுயேச்சை) – 5 ஆயிரத்து 713

ஏ.கலியபெருமாள்(சுயேச்சை) – 3 ஆயிரத்து 407

திமுக வேட்பாளர் அண்ணாதுரை பெயர் கொண்ட சுயேட்சை வேட்பாளர்கள்  பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு, 

எஸ்.அண்ணாதுரை(சுயேச்சை) – 1, 172

ஏ.அண்ணாதுரை(சுயேச்சை) – 516

எஸ்.அண்ணாதுரை(சுயேச்சை) – 648

ஏற்கனவே நாம் தமிழர் வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட சி.ஜெ.பென்னிராஜன்(பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி) – 4 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்றிருக்கிறார். 

நோட்டாவுக்கு 11 ஆயிரத்து 957 வாக்குகள் விழுந்துள்ளது. 

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கர பாண்டியன் வழங்கினார். அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ மு.பெ.கிரி மற்றும் பலர் உடனிருந்தனர். 

இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழக முதல்வர் தன்னுடைய ஆட்சிக்கு திராவிட மாடல் என பெயர் சூட்டி இந்த மூன்று ஆண்டு காலமாக மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு நல்ல ஆட்சியை நடத்தினார். அதற்கு அங்கீகாரமாகத்தான் மக்கள் பாராட்டுகிற வகையில் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழக தலைவரின் தலைமையில் அமைந்த இந்தியா கூட்டணியின் 40 வேட்பாளர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

இந்த வெற்றி என்பது இந்தியா கூட்டணி வெற்றி என்று சொன்னாலும் கூட அதற்கு முழுக்க முழுக்க முதல் காரணம் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஆவார். அவர் எடுத்த அரசியல் வியூகம், கூட்டணி தோழர்களை ஆரவணைத்தது, கூட்டணி தலைவருக்கு உரிய மரியாதை கொடுத்தது, இப்படி பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தான் இந்தியாவிலேயே எந்தக் கூட்டணிக்கும் வராத அளவிற்கு 40 நாடாளுமன்ற தொகுதியிலும் இந்தியா கூட்டணி தமிழ்நாட்டின் முதலமைச்சருடைய தலைமையில் வெற்றி பெற்றிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

----------------------------------------------


Next Post Previous Post

No comments