போலீஸ்காரர் தற்கொலை-கர்ப்பிணி மனைவியும் தற்கொலை
போலீஸ்காரர் தற்கொலை-கர்ப்பிணி மனைவியும் தற்கொலை
குடும்ப தகராறில் விபரீதம்
திருவண்ணாமலை அருகே குடும்ப சண்டையில் போலீஸ்காரரர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் துக்கம் தாளாமல் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சொரக்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுராமனின் மகன் அஜித்குமார். (வயது 28). சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யபாரதி(23). இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சர்வேஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. திவ்யபாரதி 4 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார்.
அஜித்குமார் |
இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனையில் அஜித்குமார் கடந்த 28ந் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்ததால் திவ்யபாரதி துக்கத்தில் இருந்து வந்தார்.
இன்று துக்கம் தாளாமல் தனது வீட்டில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திவ்யபாரதி |
குடும்ப சண்டையில் ஒன்றரை வயது குழந்தையை தவிக்க விட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments