செல்போன் தொலைந்தால் உடனே இதை செய்யுங்கள்
செல்போன் தொலைந்தால் உடனே இதை செய்யுங்கள்
எஸ்.பி. கார்த்திகேயன் அறிவுரை
செல்போன் தொலைந்து போனால் 198 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சிம்கார்டை முடக்க வேண்டும் என எஸ்.பி. கார்த்திகேயன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆ.பழனி தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள அலுவலர்களுக்கு காணாமல் போன, தவறவிட்ட, திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட CEIR - Central Equipment Identify Register (ceir.gov.in) மத்திய சாதன அடையாள பதிவேடு இணையதளத்தை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் பேசியதாவது,
பொதுமக்கள் தங்களது செல்போன் தொலைந்து போனாலோ, திருடு போனாலோ முதலில் தங்கள் சிம்கார்டை 198 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முடக்க வேண்டும் (Block). பின்னர் தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று தொலைந்து போன செல்போனை கண்டுபிடித்து தரக்கோரி தங்கள் புகார் மனு, தங்களின் அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (அ) அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒர் அடையாள அட்டையின்) நகல், தொலைபேசி வாங்கிய ரசீது, IMEI Number ஆகியவற்றை இணைத்து புகார் அளிக்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் CSR பதிவு செய்து தொலைந்து போன செல்போன் விவரங்களை CEIR இணையதளத்தில் பதிவு செய்வார்கள். தொலைந்து போன செல்போனை யாரேனும் பயன்படுத்தினால் CEIR இணையதளத்தில் தகவல் பதிவேற்றப்படும். பின்னர் அந்த தொலைபேசி கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இனையவழி மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் Part time Job,Online Investment,Online trading போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்றும் இணையவழி மோசடி மூலம் பணத்தை இழந்திருந்தால் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்க வேண்டும் அல்லது புகார்களை cybercrime.gov.in என்ற இனையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் இணையதளத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
No comments