திருவண்ணாமலைக்கு கோயம்பேடுலிருந்து 85 பஸ்கள்
திருவண்ணாமலைக்கு கோயம்பேடுலிருந்து 85 பஸ்கள்
கூடுதலாக இயக்க அரசு உத்தரவு
திருவண்ணாமலைக்கு 23ந் தேதி முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 30 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 30ந் தேதி முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை, போளூர், மற்றும் வந்தவாசி ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் கிளாம்பாக்கம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின்னர் தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாதவரம் பேருந்து முனையம் வரை இயக்கப்படும் பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி, அம்பத்தூர் எஸ்டேட் வழியாக MMBT-க்கு இயக்கப்பட்டு வருகிறது.
ஆரணி, செய்யாறு பகுதிகளில் இருந்து பூந்தமல்லி மார்க்கமாக சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் எவ்வித மாற்றமும் இன்றி கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் வருகிற 23ந் தேதி முதல் திருவண்ணாமலைக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கூடுதலாக 30 பஸ்களை இயக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
அதாவது சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து ஆற்காடு. ஆரணி வழியாக இயக்கப்படும் 44 பஸ்கள், காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பஸ்களுடன் கூடுதலாக 30 பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் இந்த கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் பஸ்கள் எந்த வழித் தடத்தில் இயக்கப்படும் என்பதை போக்குவரத்து துறை தெளிவாக தெரிவிக்கவில்லை. எனவே இந்த பஸ்கள் ஆற்காடு மற்றும் வந்தவாசி வழியாக இயக்கப்படும் என தெரிகிறது.
இதன் மூலம் திருவண்ணாமலைக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து 85 பஸ்களும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வழியாக சென்னை பீச்சுக்கு ரூ.50 குறைந்த கட்டணத்தில் தினசரி ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில இந்த கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
------------------------------------------
No comments