மலை உச்சியில் பிரகாசித்த சந்திரன்-பக்தர்கள் பரவசம்

மலை உச்சியில் பிரகாசித்த சந்திரன்-பக்தர்கள் பரவசம்

வீதிகளில் சிதறி கிடந்த பக்தர்களின் செருப்புகள்-காரணம் என்ன?

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று மலை உச்சியில் சந்திரன் பிரகாசித்ததை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். கிரிவலத்திற்கு வருகை தந்த பக்தர்களின் செருப்புகள் நூற்றுக்கணக்கில் ரோடுகளில் சிதறி கிடந்தது. இதனால் குப்பைகளோடு சேர்த்து இதையும் அகற்ற வேண்டிய நிலைக்கு துப்புரவு பணியாளர்கள் தள்ளப்பட்டனர். 

மலை உச்சியில் பிரகாசித்த சந்திரன்-பக்தர்கள் பரவசம்

பஞ்சபூத தலங்களில் அக்னிதலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவான நேற்று அதிகாலை பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. 

அதைத்தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நடைஅடைப்பு இல்லாமல், இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். 

கோயில் நிர்வாகம் அசத்தல்

அண்ணாமலையார் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. கோயிலுக்கு செல்ல பெரிய தெரு வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. இதனால் பூதநாராயணன் கோயில் வரை நிழற்பந்தலும், தரைவிரிப்பும் போடப்பட்டிருந்தது. இது மட்டுமன்றி கோயிலுக்குள் பக்தர்களுக்கு வெப்பத்தின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக 60 ஆயிரம் லிட்டர் நீர் மோர், 60 ஆயிரம் கடலை உருண்டை, 80 ஆயிரம் வாழைப்பழம், 1 லட்சத்து 60 ஆயிரம் பிஸ்கட், தர்ப்பூசணிப்பழம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு மற்றும் 21/2 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் ஆகியவை முதன்முறையாக கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

2,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இந்த பஸ்கள் போதுமானதாக இல்லை. மேலும் இன்று இந்த சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட காரணத்தால் பக்தர்கள் அவதிப்பட்டனர். திருவண்ணாமலை ரயில் நிலையத்திலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. 

வீதிகளில் சிதறி கிடந்த பக்தர்களின் செருப்புகள்

மலை உச்சியில் பிரகாசித்த சந்திரன்-பக்தர்கள் பரவசம்

1800 துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை நகரிலும், கிரிவலப்பாதையிலும் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றினர். இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் பக்தர்களின் செருப்புகள் சாலைகளில் சிதறி கிடந்தது. காலணி பாதுகாப்பிடம் என சொல்லி பக்தர்களிடம் 1 ஜோடி செருப்புக்கு ரூ.10 முதல் ரூ. 15 வரை சிலர் வசூலித்து விட்டு செருப்புகளை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

சித்ரா பௌர்ணமிக்கு கிரிவலம் வந்தார்களா இல்லை காலணிகளை (செருப்பு) கழற்றி விட்டுவிட்டு போக வந்தார்களா என்று தெரியவில்லை யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க போல (சனி தொலைந்து போச்சு என்று) எங்கு பார்த்தாலும் காலணிகள் முடியவில்லை கிரிவலம் வரும் அன்பர்களே திருவண்ணாமலையிலும் மக்கள் தான் வாழ்கிறோம் சற்று சிந்தியுங்கள் மூடநம்பிக்கைளை தவிர்கவும் ஆன்மீக நகரான திருவண்ணாமலையை சுத்தமாக வைக்க ஒத்துழைப்பு தாருங்கள்  

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குப்பையோடு சேர்த்து செருப்புகளையும் அகற்ற வேண்டிய நிலை துப்புரவு பணியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

Next Post Previous Post

No comments