கோலம் வரைந்தால் வெகுமதி- கலெக்டர் அறிவிப்பு
தேர்தல் சம்மந்தமாக விழிப்புணர்வு கோலம் வரைபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
நடைபெற உள்ள பாராளுமன்றத் பொதுத் தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையின் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்கும் இலக்கினை எய்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அவரவர் இல்லங்களில் 05.04.2024 அன்று காலை தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலமிட்டும் மற்றும் ரங்கோலி வரைந்தும் அதனைப் புகைப்படம் எடுத்து கீழ்கண்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக முகவரிகளில் வருகிற வெள்ளிக்கிழமை 05.04.2024 அன்று பதிவேற்றம்/டேக் (Tag) செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1) முகநூல் : @Sveep-Tiruvannamalai
2) இன்ஸ்டாகிராம் : @Sveeptvm2024, @Collectortiruvannamalai
இப்போட்டியில் சிறந்த கோலம் அல்லது ரங்கோலி தேர்வு செய்யப்பட்டு உரிய வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-------------------------------
Social Plugin