சித்ரா பவுர்ணமி-டாஸ்மாக்கிற்கு விடுமுறை

சித்ரா பவுர்ணமி-டாஸ்மாக்கிற்கு விடுமுறை

எந்தெந்த கடைகள் இயங்காது?

சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை மற்றும் நகர பகுதிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

சித்ரா பவுர்ணமி-டாஸ்மாக்கிற்கு விடுமுறை

வருகிற 23ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்திற்கு அடுத்ததாக சித்ரா பவுர்ணமிக்கு அதிக அளவிற்கு பக்தர்கள் வருவார்கள் என்பதால் தீபத்திருவிழாவிற்கு செய்வது போல் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் இயங்காது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 


சித்ரா பவுர்ணமி-டாஸ்மாக்கிற்கு விடுமுறை

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 23.04.2024 அன்று திருவண்ணாமலை நகர பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் அரசு சில்லரை மதுபானக் கடைஎண். 9481(காமராஜர் சிலை அருகில்), கடைஎண்.9261 (மணலூர்பேட்டை சாலை), கடைஎண். 9490(வேங்கிக்கால் புறவழிச்சாலை பைபாஸ்) ஆகியவைகள் இயங்காது. 

மேலும் திருவண்ணாமலை நகரத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்எல்3 (ஹோட்டல் திரிசூல், ஹோட்டல் நளா, ஹோட்டல் அஷ்ரேய்யா, ஹோட்டல் அம்மாயி (எ) அருணாச்சலா) மற்றும் முன்னாள் ராணுவவீரர்களுக்கான அங்காடி, வேங்கிக்கால் எப்எல்4A உரிமம் பெற்ற மதுபான கடைகள், மதுக்கூடங்களுக்கு 23.04.2024 அன்று மது விற்பனை நடைபெறாமல் மூடிவைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

---------------------------------------


Next Post Previous Post

No comments