அப்பளம் போல் நொறுங்கிய போலீஸ் ஜீப்-அதிகாரி பலி

அப்பளம் போல் நொறுங்கிய போலீஸ் ஜீப்-அதிகாரி பலி

திருவண்ணாமலையிலிருந்து சென்னை சென்ற அரசு பஸ் மோதியதில் 3 போலீஸ்காரர்கள் பலி

திருவண்ணாமலை அருகே அரசு பஸ்சும், போலீஸ் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிறப்பு காவல் படை அதிகாரி உள்பட 3 பேர் இறந்தனர். 

அப்பளம் போல் நொறுங்கிய போலீஸ் ஜீப்-அதிகாரி பலி

கர்நாடகா மாநில சிறப்பு காவல் படையில் உதவி கமாண்டன்ட் ஆக பணிபுரிந்து வந்தவர் டி.பிரபாகரா (வயது 42), அதே படையில் பாதுகாப்பாளராக பணிபுரிந்து வருபவர் விட்டல்(35). இவர்கள் சேலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இவர்களும் சேலத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் தினேஷ் (29), ஜெயக்குமார்(37) ஆகியோரும் இன்று காலை சேலத்திலிருந்து காஞ்சிபுரம் கோயிலுக்கு போலீஸ் ஜீப்பில் சென்றனர். ஜீப்பை போலீஸ்காரர் தினேஷ் ஓட்டிச் சென்றார். 

காஞ்சிபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். இன்று மாலை அந்த ஜீப், கீழ்பென்னாத்தூர் புறவழிச் சாலையில் வந்த போது எதிரில் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சின் முன்பக்கம் சேதம் அடைந்தது. 

அப்பளம் போல் நொறுங்கிய போலீஸ் ஜீப்-அதிகாரி பலி
பிரபாகரா 

இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த உதவி கமாண்டன்ட் பிரபாகரன், தினேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஜீப்பில் இருந்த விட்டல்,ஹேமந்த், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 

அப்பளம் போல் நொறுங்கிய போலீஸ் ஜீப்-அதிகாரி பலி
 தினேஷ்

இவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு விட்டல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

‌திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.