சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது நடவடிக்கை

சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது நடவடிக்கை

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியீடு 

19.04.2024 அன்று மக்களவை பொது தேர்தல் நடைபெறும் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

மேலும் இது சம்மந்தாக புகார் அளிக்க தொலைபேசி எண்களையும் வெளியிட்டிருக்கிறார். 


இது சம்மந்தமாக திருவண்ணாமலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 

முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் மற்றும் திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைகளின்படி, 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து வணிக நிறுவனங்கள், ஐடி/ஐடிஸ்/பிபிஓ, கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அந்தந்த பகுதிகளில் தேர்தல் நடைபெறும் நாளன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு அளிக்காத நிறுவனங்கள் மீது 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 153-பி-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது நடவடிக்கை

விடுமுறை அளிக்கப்படாத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மக்களவை பொதுத்தேர்தல் நாளான்று விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை அளிக்க கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புகார் அளிக்க வேண்டிய அலுவலர்களின் அலைபேசி எண்

சீ. மீனாட்சி,தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்),திருவண்ணாமலை. அலைபேசி எண்:97108 25341

த.சாந்தி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், 1ம் வட்டம், திருவண்ணாமலை. அலைபேசி எண்:99523 08664

ஆ.ஆத்திப்பழம், தொழிலாளர் உதவி ஆய்வாளர், 2ம் வட்டம், திருவண்ணாமலை. அலைபேசி எண்: 94429 65035

------------------------------------------ 


Next Post Previous Post

No comments