ஒரே ஊராட்சியிலிருந்து 250 திமுகவினர் விலகல்
ஒரே ஊராட்சியிலிருந்து 250 திமுகவினர் விலகல்
காரணம் என்ன?
துர்க்கைநம்மியந்தல் ஊராட்சியிலிருந்து 250 பேர் திமுகவிலிருந்து விலகி பாமகவில் மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் முன்னிலையில் இணைந்தனர்.
திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாமக அலுவலகத்தில் திமுக மற்றும் அதிமுகவிலிருந்து விலகி பாமகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாமக மாவட்ட துணை தலைவர் நா.ஏழுமலை ஏற்பாட்டின் பேரில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த துர்க்கைநம்மியந்தல் ஊராட்சியில் இருந்து திமுக பிரமுகர் எம்.மணிகண்டன் தலைமையில் கே.சேட்டு டி.ஞானவேல் எஸ்.குமார் கே.ராஜா ஆர்.பாலமுருகன் டி.செல்வமணி உத்தண்டி கே.முருகதாஸ் தவமணி ஏ.கணேசன் ஆர்.அருண் உள்பட 250க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி பாமக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் முன்னிலையில் இணைந்தனர்.
இதேபோல சு.வாளாவெட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பன்னீர்செல்வம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி பாமகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் க.நாராயணசாமி, மாவட்ட தலைவர் மு.பெரியசாமி, பாமக மாவட்ட தலைவர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா.காளிதாஸ், ப.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒரே ஊராட்சியிலிருந்து ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் விலகியிருப்பது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. துர்க்கை நம்மியந்தலை திருவண்ணாமலை மாநகராட்சியோடு இணைக்க கூடாது என அப்பகுதி மக்கள் கடந்த மாதம் சாலை மறியலில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், வரிகள் உயரும் எனவே மாநகராட்சியோடு இணைக்க கூடாது என போராடி வந்தனர். இந்நிலையில்தான் 250க்கும் மேற்பட்டவர்கள் திமுகவிலிருந்து விலகியுள்ளனர்.
-------------------------------------
No comments